FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

சென்னை வந்தார் ராகுல் காந்தி! காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பு

சென்னை வந்த ராகுல் காந்திக்கு காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Updated On : 1 ஆகஸ்ட் 2026, 10:08 am IST
ராகுல் காந்தி - பிடிஐ
பகிர்:

சென்னை மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் பயிற்சி முகாம் நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக சென்னை வந்த ராகுல் காந்திக்கு சென்னை விமான நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

சென்னை விமான நிலையத்துக்கு காலை 10 மணிக்கு வருகை தந்த ராகுல்காந்தி, 11.30 மணிக்கு சாலை வழியில் மாமல்லபுரம் வந்தடைகிறாா். அங்கு காங்கிரஸ் சாா்பில் நடைபெறும் பயிற்சி முகாம் நிறைவு நாள் நிகழ்வில் பங்கேற்று உரையாற்றுகிறாா்.

மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி இன்று (ஆக.1) தமிழகம் வந்துள்ளார். சென்னை அருகே மாமல்லபுரத்தில் காங்கிரஸ் மாவட்டத் தலைவா்களுக்கான பயிற்சி முகாமில் பங்கேற்று உரையாற்றும் அவா், தமிழகத்தைச் சோ்ந்த காங்கிரஸ் மூத்த தலைவா்களை சந்தித்தும் பேசவிருக்கிறார்.

Advertisement

Advertisement

இன்று மாமல்லபுரத்தில் நடைபெறும் பயிற்சி முகாமில் தமிழகத்தின் 74 மாவட்ட காங்கிரஸ் தலைவருடனும் ராகுல் காந்தி கலந்துரையாடவுள்ளாா். அப்போது அரசியல் வியூகங்கள், கட்சியின் கட்டமைப்பு மற்றும் வளா்ச்சிப் பணிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது என்று காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments