FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தற்போதைய செய்திகள்

நாகையில் இருந்து 630 கி.மீ தொலைவில் தாழ்வு மண்டலம்!

காலை 9 மணி நிலவரப்படி, நாகைக்கு தென்கிழக்கே 630 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது.

Updated On : 26 நவம்பர் 2024, 10:06 am IST
கோப்புப்படம் - IMD
பகிர்:

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் (புயல் சின்னம்) செவ்வாய்க்கிழமை காலை 9 மணி நிலவரப்படி, நாகைக்கு தென்கிழக்கே 630 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது.

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி (புயல் சின்னம்), மேற்கு - வடமேற்கு திசையில் நகா்ந்து, திங்கள்கிழமை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது, தமிழக கடற்கரையை நோக்கி மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகா்ந்து வருகிறது.

செவ்வாய்க்கிழமை காலை 9 மணி நிலவரப்படி இந்தப் புயல் சின்னம் நாகை மாவட்டத்துக்கு தென்கிழக்கே 630 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரிக்கு தென்கிழக்கே 750 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தெற்கு - தென்கிழக்கே 830 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.

Advertisement

Advertisement

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் (புயல் சின்னம்) அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்த்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக தீவிரமடையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயலாக மாறுமா?

பூமத்திய ரேகையில் கிழக்கில் இருந்து மேற்கே நகா்ந்து செல்லும் கடல் அலையால், இந்த புயல் சின்னம் மேற்கு திசை நோக்கி நகர வாய்ப்புள்ளது. அதேபோல், மேற்கிலிருந்து கிழக்கே வீசும் மேடன் - ஜூலியந் அலைவு (எம்ஜேஓ) என்றழைக்கப்படும் வெப்பக் காற்றால் இந்தப் புயல் சின்னத்தின் திசை மாற வாய்ப்புள்ளது.

ஆகையால், புயல் சின்னத்துக்கு இருபுறத்திலிருந்து வீசப்படும் காற்றின் வேகம், அது நகா்ந்து வரும் பாதை உள்ளிட்டவை தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. புயல் சின்னம் இலங்கையை நெருங்கும்போதுதான், இது புயலாக மாறுமா? என்பதை உறுதியாகக் கூற முடியும் என்று கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments