பிரதர் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
ஜெயம் ரவியின் பிரதர் படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பாக....
ஜெயம் ரவி - எம். ராஜேஷ் கூட்டணியில் உருவான பிரதர் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
‘சிவா மனசுல சக்தி’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’, ’ஆல் இன் ஆல் அழகுராஜா’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய எம். ராஜேஷ், நடிகர் ஜெயம் ரவியை வைத்து இயக்கிய புதிய படம் பிரதர்.
இதையும் படிக்க: ஷாகித் கபூர், பூஜா ஹெக்டேவின் தேவா: ரிலீஸ் தேதி மாற்றம்!
Advertisement
Advertisement
இந்தப் படம் தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாகி, கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்தப் படத்தில் பிரியங்கா மோகன் நாயகியாக நடித்துள்ளார்.
பிரதர் படத்தில் இடம் பெற்றுள்ள ‘மக்காமிஷி’ பாடல் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமடைந்தது.
இந்த நிலையில், பிரதர் திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் நாளை(நவ. 29) வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.