மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
மேட்டூர் அணையின் நீர் பிடிப்புப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு பெய்த மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 8,268 கன அடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர் பிடிப்புப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு பெய்த மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 8,268 கன அடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணையில் நீர் பிடிப்புப் பகுதிகளில் லேசான மழை பெய்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 6,416 கன அடியிலிருந்து வினாடிக்கு 8,268 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க | போருக்கு தயாராகும் இஸ்ரேல்-ஈரான்: என்ன நடக்கும்?
Advertisement
Advertisement
மேட்டூர் அணை நீர்மட்டம் சனிக்கிழமை காலை 93.40 அடியிலிருந்து 92.84 அடியாக சரிந்தது.
அணையில் இருந்து காவேரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 15,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 800 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணையின் நீர் இருப்பு 55.95 டிஎம்சியாக உள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.