முகப்பு
தற்போதைய செய்திகள்

வெற்றி வசந்த் - வைஷ்ணவிக்கு திருமண நிச்சயதார்த்தம்!

சிறகடிக்க ஆசை தொடர் நடிகர் வெற்றி வசந்த் நிச்சயதார்த்தம்.

Updated On : 14 அக்டோபர் 2024, 4:18 pm IST
வெற்றி வசந்த் - வைஷ்ணவி திருமண நிச்சயதார்த்தம்.
பகிர்:

சிறகடிக்க ஆசை தொடர் நடிகர் வெற்றி வசந்த் மற்றும் பொன்னி தொடர் நாயகி வைஷ்ணவிக்கு திருமண நிச்சயதார்த்தம் நேற்று(அக். 13) நடைபெற்றது.

சென்னையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சின்னத்திரை பிரபலங்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என முக்கியமானவர்கள் பங்கேற்றனர்.

வெற்றி வசந்த் - வைஷ்ணவின் திருமண நிச்சயதார்த்தத்தில் கலந்துகொண்ட சின்னத்திரை பிரபலங்கள், அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் விடியோக்களை தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு, வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலத் தொடர் சிறகடிக்க ஆசை. இத்தொடரில் முத்து பாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் வெற்றி வசந்த். இவர் யூடியூபில் பல தொடர்களில் நடித்துள்ளார். தற்போது தொலைக்காட்சி தொடரில் நடித்து வருகிறார்.

அதேபோல், ராஜா ராணி 2ஆம் பாகத்தில் பார்வதி பாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டவர் நடிகை வைஷ்ணவி. இவர், தற்போது பொன்னி தொடரில் நாயகியாக நடித்து வருகிறார்.

இதனிடையே, தன்னுடைய காதலி வைஷ்ணவியை விரைவில் திருமணம் செய்யவுள்ளதாக நடிகர் வெற்றி வசந்த் முன்னதாக தெரிவித்து இருந்தார். தற்போது, இவர்களுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.

சின்னத்திரையில் காதலித்து திருமணம் செய்துகொண்ட நட்சத்திர ஜோடிகள் சஞ்சீவ் - ஆல்யா மானசா, சித்து - ஸ்ரேயா, ஆர்யன் - ஸ்ருதிகா, சுரேந்தர் - நிவேதிதா, ஷாபானா - ஆர்யன் வரிசையில் வெற்றி வசந்த் - வைஷ்ணவியும் இணைந்துள்ளனர்.

வெற்றி வசந்த் - வைஷ்ணவியின் திருமணம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments