FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தீபாவளி: நெல்லை, மதுரைக்கு சிறப்பு ரயில்கள்!

தீபாவளிப் பண்டிகையை 2 சிறப்பு ரயில்கள் இயக்கம்.

22 அக்டோபர் 2024, 8:46 pm IST
சிறப்பு ரயில்
பகிர்:

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு நெரிசலை குறைப்பதற்காக அக். 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 2 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.

சென்னை சென்ட்ரல் - கன்னியாகுமரி சிறப்பு ரயில்

அக். 29-ல் சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 11.45 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில்(வண்டி எண்: 06001) மறுநாள் கன்னியாகுமரியை சென்றடையும். மறுவழித்தடத்தில் அக். 30-ல் பிற்பகல் 2.45 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் இந்த ரயில்(வண்டி எண்: 06002) மறுநாள் காலை 3.15 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.

Advertisement

Advertisement

இந்த சிறப்பு ரயில் சென்னை சென்ட்ரல்- கன்னியாகுமரி இடையே அக்டோபர் 29 மற்றும் நவம்பர் 5 ஆகிய தேதிகளில் இயக்கப்படுகிறது. மறுவழித்தடத்தில் கன்னியாகுமரி - எழும்பூர் இடையே அக்டோபர் 30 நவம்பர் 6 ஆகிய தேதிகளில் இயக்கப்படுகிறது.

இந்த சிறப்பு ரயில் விழுப்புரம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி வழியே இயக்கப்படுகிறது.

அக். 30-ல் சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில்(வண்டி எண்: 06005) மறுநாள் செங்கோட்டையை சென்றடையும். மறுவழித்தடத்தில் அக். 31-ல் இரவு 7.30 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் இந்த ரயில்(வண்டி எண்: 06006) மறுநாள் காலை 9.20 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.

இந்த சிறப்பு ரயில் சென்னை சென்ட்ரல் - செங்கோட்டை இடையே அக்டோபர் 30 மற்றும் நவம்பர் 6 ஆகிய தேதிகளில் இயக்கப்படுகிறது. மறு வழித்தடத்தில் செங்கோட்டை - சென்னை சென்ட்ரல் இடையே அக்டோபர் 31, நவம்பர் 7 ஆகிய தேதிகளில் இயக்கப்படுகிறது.

இந்த சிறப்பு ரயில் சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், தென்காசி வழியே இயக்கப்படுகிறது.

சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை(அக். 23) காலை 8 மணிக்கு தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments