FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தற்போதைய செய்திகள்

மீண்டும் போர்? தெற்கு சூடான் அதிகாரிகளுடன் உகாண்டா அதிபர் பேச்சுவார்த்தை!

தெற்கு சூடான் அதிகாரிகளுடன் உகாண்டா அதிபர் பேச்சுவார்த்தை நடத்துவதைப் பற்றி...

Updated On : 4 ஏப்ரல் 2025, 6:05 pm IST
கோப்புப் படம்
பகிர்:

தெற்கு சூடானில் உள்நாட்டுப் போர் துவங்கும் அபாயம் நிலவுவதால் அந்நாட்டு அதிகாரிகளுடன் உகாண்டா அதிபர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

கிழக்கு ஆப்பிரிக்க நாடான தெற்கு சூடானில் முக்கிய எதிர்க்கட்சி தலைவர் ரெயிக் மச்சார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதிலிருந்து அரசு படைகளுக்கு கிளர்ச்சிப்படைகளுக்கும் இடையில் மோதல்கள் வெடித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, கடந்த மார்ச் மாதம் தெற்கு சூடான் அரசுக்கு ஆதரவாக உகாண்டா தனது படைகளை அந்நாட்டுக்கு அனுப்பி வைத்தது. மேலும், அந்நாட்டில் மீண்டும் உள்நாட்டுப் போர் துவங்கும் சூழல் நிலவி வருகின்றது.

Advertisement

Advertisement

இந்நிலையில், தலைநகர் ஜூபாவிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள உகாண்டா அதிபர் யோவேரி முசேவேனி நேற்று (ஏப்.3) தெற்கு சூடான் அதிபர் சால்வா கிர்ருடன் கலந்து உரையாடியுள்ளார். மேலும், அந்நாட்டு அதிகாரிகளுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து தெற்கு சூடான் வெளியுறவுத் துறை அமைச்சர் முஹம்மது அப்தல்லா கோக் கூறுகையில், மேற்கொள்ளப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தின்படி அமைதியை நிலைநாட்டும் என அந்நாட்டின் அரசு அதிபர் முசேவேனிக்கு உறுதியளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, 5 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்த உள்நாட்டுப் போரானது கடந்த 2018-ம் ஆண்டு உகாண்டா நாடு முக்கிய பங்கு வகித்த ஒப்பந்ததின் அடிப்படையில் முடிவு பெற்றது.

கடந்த மார்ச் மாதத் துவக்கத்தில் ரெயிக் மச்சாரின் அதாரவுப் படைகள் மேல் நைல் மாநிலத்தில் சிக்கித் தவித்த அரசுப் படைகளை மீட்க வந்த ஐ.நா. ஹெலிகாப்டரின் மீது தாக்குதல் நடத்தினர்.

இதனால், ஜெர்மனி மற்றும் நார்வே உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் தெற்கு சூடான் தலைநகரிலுள்ள தங்களது தூதரகங்களை தற்காலிகமாக மூடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: பாகிஸ்தான் சிந்து கால்வாய் திட்டம்: மத்திய அரசின் கூட்டணிக் கட்சிகள் மோதல்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments