ரயிலிலிருந்து தவறி விழுந்து இளைஞர் பலி
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே ரயிலில் பயணித்த இளைஞர் வெள்ளிக்கிழமை தவறி விழுந்ததில் பலியானார்.
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே ரயிலில் பயணித்த இளைஞர் வெள்ளிக்கிழமை தவறி விழுந்ததில் பலியானார்.
கன்னியாகுமரி மாவட்டம், அழகாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜாமணி மகன் ஜார்ஜ் நெல்சன் (34). இவர் நாகர்கோவிலிலிருந்து தாம்பரம் செல்லும் விரைவு ரயிலில் பயணம் செய்தவர் வெள்ளிக்கிழமை காலை விக்கிரவாண்டி வட்டம், முண்டியம்பாக்கம் பகுதியில் ரயிலிலிருந்து தவறி விழுந்து பலியானார்.
இது குறித்து தகவலறிந்த ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவர் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.