சீனா விதித்த வரியை திரும்ப பெறாவிட்டால் 50% கூடுதல் வரி! - டிரம்ப் எச்சரிக்கை
சீனா விதித்த வரியை திரும்ப பெறாவிட்டால் 50% வரி விதிக்கப்படும் - டிரம்ப் எச்சரிக்கை
சீனா விதித்த வரியை திரும்ப பெறாவிட்டால் 50 சதவிகிதம் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் பரஸ்பர வரி விதிப்புக்குப் பதிலடியாக அந்த நாட்டுப் பொருள்கள் மீது 34 சதவீத கூடுதல் இறக்குமதி வரி விதிக்கப்படுவதாக சீனா வெள்ளிக்கிழமை அறிவித்திருந்தது. வரும் 10-ஆம் தேதி முதல் அமலுக்கு வரவிருக்கும் இந்த கூடுதல் வரி விதிப்பு, அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் அனைத்து பொருள்களுக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நாளைக்குள்(ஏப்ரல் 8) சீனா அமெரிக்கா விதித்துள்ள இந்த வரி விதிப்பை திரும்பி பெறாவிட்டால், 50 சதவிகிதம் வரி விதிக்கப்படும். அதுமட்டுமின்றி, கூடுதலாக, சீனாவுடனான சந்திப்புகள் தொடர்பான அனைத்து பேச்சுவார்த்தைகளும் நிறுத்தப்படும். சந்திப்புகள் குறித்து பிற நாடுகளுடனான பேச்சுவார்த்தைகள் உடனடியாகத் தொடங்கும் என்று அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.