மேட்டூர் அணை நிலவரம்!
மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 120 அடியாக நீடித்து வருகிறது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 120 அடியாக நீடித்து வருகிறது.
மேட்டூர் அணைக்கு சனிக்கிழமை காலை 6 மணிக்கு நீர்வரத்து வினாடிக்கு 19,850 கன அடியாக உள்ளது.
அணையில் இருந்து காவேரி டெல்டா பாசனத்திற்கும் கால்வாய் பாசனத்திற்கும் வினாடிக்கு 19,850 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
Advertisement
Advertisement
நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 16,500 கன அடி நீரும், உபரி நீர் போக்கி வழியாக வினாடிக்கு 2500 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.
கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு மேல்மட்ட மதகு வழியாக வினாடிக்கு 850 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டிஎம்சியாகவும் உள்ளது.
The water level of Mettur Dam continues to remain at 120 feet.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.