முகப்பு
தற்போதைய செய்திகள்

சிம்புவின் 51-வது படத் தலைப்பு அறிவிப்பு!

சிம்புவின் 51-வது படம் குறித்து...

Updated On : 3 பிப்ரவரி 2025, 6:48 pm IST
பகிர்:

சிம்புவின் 51-வது படத்திற்கான அறிவிப்பை படக்குழு அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.

நடிகர் சிம்புவிற்கு மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல என ஹாட்ரிக் ஹிட் அடித்தது.

இந்நிலையில், நடிகர் சிம்புவின் பிறந்தநாளான இன்று (பிப்.3), அவர் நடிக்கும் புதிய திரைப்படங்களின் அறிவிப்புகள் வெளியான வண்ணம் உள்ளன.

Advertisement

Advertisement

முன்னதாக, ‘பார்க்கிங்’ திரைப்பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘எஸ்டிஆர் - 49’ திரைப்படத்தின் அறிப்பு போஸ்டர் இன்று (பிப்.3) வெளியிடப்பட்டது.

இதையும் படிக்க: ’எஸ்டிஆர் - 50’ தயாரிப்பாளராக களமிறங்கும் நடிகர் சிம்பு!

தொடர்ந்து, தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் படத்தில் சிம்பு நடிக்கிறார். இப்படத்துக்கு தற்காலிகமாக எஸ்டிஆர் 50 எனப் பெயரிடப்பட்டுள்ள நிலையில், இப்படத்தின் மூலம் சிம்பு தயாரிப்பாளராக அறிமுகமாகிறார்.

சிம்புவின் 51-வது படத்தின் அறிவிப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்துக்கு ‘காட் ஆஃப் லைவ்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இப்படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

காட் ஆஃப் லைவ்’ திரைப்படம் கோடை விடுமுறையின்போது வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.