இன்று புரட்டாசி 2வது சனிக்கிழமை! பெருமாள் கோயில்களில் குவிந்த பக்தர்கள்
இன்று புரட்டாசி 2வது சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாள் கோயில்களில் குவிந்த பக்தர்கள்
இன்று புரட்டாசி மாதம் இரண்டாவது சனிக்கிழமை என்பதால், தமிழகம் முழுவதும் பிரசித்தி பெற்ற பெருமாள் கோயில்களில் பக்தர்கள் குவிந்தனர். நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.
புரட்டாசி மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமையான இன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பெருமாள் ஆலயங்கள் அதிகாலை திறக்கப்பட்டு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
இதனையடுத்து காலை முதலே பக்தர்கள் குவிந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதேபோல் தஞ்சாவூர் நாலுகால் மண்டபம் பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது, இக்கோவிலில் புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு மூலவர் சுவாமிக்கு முத்தங்கி (இராஜ) அலங்காரம் செய்யப்பட்டு ஆரத்தி காட்டப்பட்டது.
Advertisement
Advertisement
தஞ்சை கொண்டிராஜ பாளையத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ யோக நரசிம்ம பெருமாள், ஸ்ரீலட்சுமி நரசிம்ம பெருமாள் ஆலயத்தில் சுவாமிக்கு புஷ்ப அலங்காரம் சிறப்பாக செய்யப்பட்டு ஆரத்தி காண்பிக்கப்பட்டது,
இதில் ஏராளமான மக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா, கோவிந்தா என கோஷமிட்டு மனமுருக வேண்டி கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.