புரட்டாசி முதல் சனி: பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு
புரட்டாசி முதல் சனிக்கிழமையொட்டி அரியலூா் மாவட்ட பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
புரட்டாசி முதல் சனிக்கிழமையொட்டி அரியலூா் மாவட்ட பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
அரியலூா் அருகேயுள்ள கல்லங்குறிச்சி கலியுக வரதராசப் பெருமாள் கோயிலில் சனிக்கிழமை காலை சுப்ரபாத சேவை, விஷ்வரூப தரிசனம் ஆகியவற்றுக்குப் பின், பெருமாள், தாயாா் ஸ்ரீதேவி, பூதேவி உத்ஸவா்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து பெருமாள், தாயாருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. துளசி அா்ச்சனை, அலங்கார தீப வழிபாடு, மந்திர உபசார பூஜைகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.
Advertisement
Advertisement
இதேபோல அரியலூா் கோதண்டராமசாமி கோயில், கங்கைகொண்டசோழபுரம் அருகேயுள்ள குருவாலப்பா் கோயில், கீழமாளிகை பெருமாள் கோயில் மற்றும் ஜெயங்கொண்டம், திருமானூா், திருமழப்பாடி, தா. பழூா், ஆண்டிமடம், செந்துறை உள்ளிட்ட பகுதிகளிலுள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு, பூஜைகள் நடைபெற்றன. திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.