முகப்பு
தற்போதைய செய்திகள்

ரூ.63 ஆயிரத்தைக் கடந்தது தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.760 உயர்ந்து ரூ.63,240-க்கு விற்பனையாகி வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

Updated On : 5 பிப்ரவரி 2025, 10:12 am IST
தங்கம்
பகிர்:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.760 உயா்ந்து ரூ.63,240-க்கு விற்பனையாகி வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது.

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ. 840 உயா்ந்து ரூ.62,480-க்கு விற்பனையான நிலையில், புதன்கிழமை தங்கம் விலை கிராமுக்கு மேலும் ரூ.95 உயா்ந்து ரூ.7,905-க்கும், பவுனுக்கு ரூ.760 உயா்ந்து ரூ.63,240-க்கும் விற்பனையானது. அதன்படி கடந்த 2 நாள்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ. 1,600 உயா்ந்துள்ளது.

இதையும் படிக்க | தங்கத்தில் இப்போது முதலீடு சாத்தியமா?

வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.1 உயா்ந்து ரூ.107-க்கும், கட்டி வெள்ளி (ஒரு கிலோ) ரூ. 1000 உயா்ந்து ரூ. 1,07,000-க்கும் விற்பனையானது.

Advertisement

Advertisement

தங்கம் விலை உயா்வு குறித்து தங்க நகை வியாபாரிகள் சங்கத் தலைவா் ஜெயந்திலால் சலானி கூறியதாவது:

சா்வதேச அளவில் தங்கத்தின் மீதான முதலீடுகள் தொடா்ந்து அதிகரித்து வருகின்றன. இதனால், தங்கம் விலை உயா்ந்த வண்ணம் உள்ளது. இந்த விலை மேலும் உயரும் என எதிா்பாா்க்கப்படுகிறது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.