முகப்பு
தற்போதைய செய்திகள்

காதலர் நாள்: திரையரங்குகளில் வெளியாகும் 10 படங்கள்!

திரையரங்குகளில் வெளியாகும் காதலர் நாள் திரைப்படங்கள் தொடர்பாக...

Updated On : 12 பிப்ரவரி 2025, 4:55 pm IST
திரையரங்கு (கோப்புப்படம்)
பகிர்:

காதலர் நாளை கொண்டாடும் வகையில் திரையரங்குகளில் வரும் பிப். 14 ஆம் தேதி 10 படங்கள் வெளியாகவுள்ளன.

இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், நவீன இளைஞர்களின் காதலைப் பேசும் படமாக உருவாகியுள்ள திரைப்படம் ’2கே லவ் ஸ்டோரி'. புதுமுக நாயகனாக ஜெகவீர் நடித்துள்ள இப்படத்தில் மீனாட்சி கோவிந்தராஜான் நாயகியாக நடித்துள்ளார். இப்படம் காதலர் நாளான்று வெளியாகிறது.

இயக்குநர் சாய் ராஜகோபால் இயக்கத்தில் கவுண்டமணி, யோகி பாபு, நான் கடவுள் ராஜேந்திரன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஒத்த ஓட்டு முத்தையா' திரைப்படம் காதலர் நாளான்று வெளியாகிறது.

Advertisement

Advertisement

இதையும் படிக்க: விஜய் தேவரகொண்டாவின் புதிய படம்: டீசர் வெளியீடு!

தன்பாலின ஈர்ப்பாளர்களின் காதல் கதையான 'காதல் என்பது பொதுவுடமை’ திரைப்படம் காதலர் நாளான்று பிப். 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

பாலாஜி முருகதாஸ் - ரச்சிதா மகாலட்சுமி நடித்துள்ள பயர் திரைப்படம் காதலர் நாளான்று வெளியாகிறது.

இப்படங்களைத் தொடர்ந்து, அது வாங்கினால் இது இலவசம், தினசரி, படவா, கண் நீரா, 9 AM 9 PM உள்ளிட்ட படங்கள் காதலர் நாளான்று வெளியாகிறது.

டப்பிங் படமான கேப்டன் அமெரிக்கா: பிரேவ் நியூ வேல்ர்ட் திரைப்படமும் பிப். 14-ல் வெளியாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments