ஆத்தூர் அருகே 2 குழந்தைகள் வெட்டிக்கொலை
ஆத்தூர் அருகே தாய் உட்பட 3 குழந்தைகளுக்கு அரிவாள் வெட்டு, இரண்டு குழந்தைகள் சம்பவ இடத்திலே பலியாகினர்.
சேலம்: ஆத்தூர் அருகே தாய் உட்பட 3 குழந்தைகளுக்கு அரிவாள் வெட்டு, இரண்டு குழந்தைகள் சம்பவ இடத்திலே பலியாகினர். படுகாயங்களுடன் மனைவி மற்றும் மற்றொரு குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே கிருஷ்ணபுரத்தை சேர்ந்தவர் அசோக்குமார். இவருக்கு மனைவி தவமணி (38), மற்றும் குழந்தைகள் வித்ய தாரணி (13), அருள் பிரகாஷ் (5),அருள்குமாரி (10) என மூன்று குழந்தைகள் உள்ளனர்.
இந்தநிலையில், புதன்கிழமை காலை அசோக்குமார் வீட்டிற்கு உறவினர்கள் வந்துள்ளனர். அப்போது அங்கு தவமணி மற்றும் மூன்று குழந்தைகள் ரத்த வெள்ளத்தில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளனர். குழந்தைகள் மூவரும் ரத்த காயங்களுடன் வெட்டுப்பட்ட நிலையில் கிடந்துள்ளனர்.
Advertisement
Advertisement
குழந்தைகள் அருள் பிரகாஷ், வித்ய தாரணி சம்பவ இடத்திலேயே பலியானது தெரியவந்தது.
பலத்த ரத்த காயங்களுடன் கிடந்த தவமணி மற்றும் குழந்தை அருள்குமாரியை மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுவைத்தனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்து வந்த கெங்கவல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்து கணவர் அசோக்குமாரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
எஸ்.பி நேரில் ஆய்வு
ஆத்தூர் அருகே இரண்டு குழந்தைகள் வெட்டிக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயல் சம்பவ இடத்தில் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். சம்பவ இடத்தில் தடயவியல் துறையினரும் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.