FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தற்போதைய செய்திகள்

‘ஏழு கடல் ஏழு மலை’ டிரைலர் அறிவிப்பு!

‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தின் டிரைலர் வெளியாகும் தேதி அறிவிப்பு.

Updated On : 15 ஜனவரி 2025, 11:27 am IST
பகிர்:

‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தின் டிரைலர் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் ராம் இயக்கத்தில் நடிகர்கள் நிவின் பாலி, சூரி, நடிகை அஞ்சலி ஆகியோர் நடிப்பில் உருவான திரைப்படம் ‘ஏழு கடல் ஏழு மலை’.

இயக்குநர் ராம் நீண்ட இடைவேளைக்கு பிறகு மலையாள நடிகர் நிவின் பாலியை வைத்து இப்படத்தை இயக்கியுள்ளார்.இந்தப் படத்தை வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பாக சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார்.

Advertisement

Advertisement

இதையும் படிக்க: ஜெயிலர்-2 முதல் டீசர்..! ஆக்‌ஷனில் மிரட்டும் ரஜினி!

ரோட்டர்டாம் மற்றும் மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாக்களில் பெற்ற வரவேற்பைத் தொடர்ந்து, ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படம் ரொமேனியா நாட்டின் ட்ரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிட தேர்வு செய்யப்பட்டது.

தனித்துவமான காட்சி அமைப்பினால் பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தும் அதிநவீன சினிமாக்களைக் கொண்டாடும் ‘நோ லிமிட்’ எனும் பிரிவில் ‘ஏழு கடல் ஏழு மலை’ தேர்வானது.

இப்படத்தின் கிளிம்ஸ் விடியோ, பாடல்கள் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்த நிலையில், ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தின் டிரைலர் வரும் ஜன. 20 ஆம் தேதி வெளியாகிறது.

‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படம் திரையரங்குகளில் பிப்ரவரியில் வெளியாகவுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments