முகப்பு
தற்போதைய செய்திகள்

காரைக்கால் மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு!

காரைக்கால் மீனவர்கள் 13 பேர் கைது.

Updated On : 28 ஜனவரி 2025, 8:45 am IST
கோப்புப்படம்
பகிர்:

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி காரைக்கால் மீனவர்கள் 2 பேர் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது.

கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டருந்த காரைக்கால் மீனவர்களை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 13 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

கைது நடவடிக்கையில் இருந்து தப்ப முயன்ற 2 மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில் 2 பேர் மீனவர்கள் காயமடைந்துள்ளனர். கைது செய்யப்பட்ட 13 பேரும் காங்கேசன் துறை கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

Advertisement

Advertisement

இதையும் படிக்க: சென்னை உள்பட 20 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை

ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 3 மீன்பிடிப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 34 மீனவர்கள் தனுஷ்கோடி அருகே வெள்ளிக்கிழமை(ஜன.25) இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

மீனவர்கள் அடிக்கடி இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்படும் சம்பவங்கள், கடலோர மீனவ சமுதாயத்தினரிடையே பதட்டத்தையும் அச்ச உணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழக மீனவர்களின் தொடர்ச்சியாக நடைபெறும் கைது சம்பவங்களைக் கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.