பொறியியல் படிப்புக்கு 3 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பம்!
தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புக்கான விண்ணப்பம் பற்றி...
தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புக்கு 3 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் பி.இ., பி.டெக். படிப்பில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேருவதற்கான இணையவழி விண்ணப்பப் பதிவு மே 7-ஆம் தேதி தொடங்கியது. முதல் நாளன்றே 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் விண்ணப்பித்த நிலையில், தினமும் சராசரியாக 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று(ஜூன் 6) நள்ளிரவு 12 மணியுடன் விண்ணப்பப்பதிவு நிறைவு பெற்றது. அதன்படி, பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வுக்காக 3,02,374 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக பொறியியல் மாணவர் சேர்க்கைக் குழு அறிவித்துள்ளது.
Advertisement
Advertisement
எனினும் கட்டணம் செலுத்தவும் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யவும் ஜூன் 9 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இதைத் தொடா்ந்து, மாணவா்களுக்கு ஜூன் 11-ஆம் தேதி ரேண்டம் எண் ஒதுக்கீடு செய்யப்படும். ஜூன் 20-ஆம் தேதிவரை அவா்களின் சான்றிதழ்கள் இணையவழியில் சரிபாா்க்கப்படும். இப்பணி முடிந்து ஜூன் 27-ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியாகும். பின்னா் கலந்தாய்வு தொடா்பான அறிவிப்பு வெளியிடப்படும்.
விளையாட்டு வீரா்களுக்கான இட ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்துள்ள மாணவா்களுக்கு சான்றிதழ்களை சரிபாா்க்கும் பணி நடைபெற்று வரும் நிலையில் அவர்களுக்கான கலந்தாய்வு அட்டவணை விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | தமிழ்நாட்டில் புதிய சுங்கச்சாவடி! ஜூன் 12-ல் திறப்பு!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.