முகப்பு
தற்போதைய செய்திகள்

திபெத்தில் தொடர் நிலநடுக்கம்...! பீதியில் மக்கள்!

திபெத்தில் அடுத்தடுத்து 3 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதைப் பற்றி...

Updated On : 13 மார்ச் 2025, 5:09 pm IST
கோப்புப் படம்
பகிர்:

சீனாவின் தன்னாட்சி பகுதியான திபெத்தில் இன்று ஒரே நாளில் அடுத்தடுத்து 3 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.

திபெத்தின் நிலப்பரப்பிலிருந்து சுமார் 10 கி.மீ. ஆழத்தில் இன்று (மார்ச் 13) அதிகாலை 01.42 மணியளவில் 4.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம் தெரிவித்திருந்தது.

அதனைத் தொடர்ந்து, இன்று காலை 8 மணியளவில் அதேபோன்ற 10 கி.மீ. ஆழத்தில் 3.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவானது. இந்த நிலநடுக்கங்கள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்படும் முன்னரே, மதியம் 2.07 மணியளவில் 4.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது அந்நாட்டு மக்களை கடும் பீதியில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement

Advertisement

இருப்பினும், இந்த நிலநடுக்கங்களினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எந்தவொரு தகவல்களும் தற்போது வரை வெளியிடப்படவில்லை.

இதையும் படிக்க: ரமலான்: 10 லட்சம் ஆடுகளை இறக்குமதி செய்கிறது அல்ஜீரியா!

இந்நிலையில், இந்திய மற்றும் யுரேசிய டெக்டோனிக் தகடுகள் இணையும் பிளவுக்கோட்டில் திபெத் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளின் நிலப்பரப்பு அமைந்துள்ளதினால் அங்கு எப்போது வேண்டுமானாலும் நிலநடுக்கம் ஏற்படும் எனும் அபாயமுள்ளது.

மேலும், தற்போது நிகழ்ந்துள்ளதைப் போன்ற ஆழமற்ற நிலநடுக்கங்கள், பூமியின் மேற்பரப்புக்கு அருகில் அதிக ஆற்றலை வெளியிடுவதினால் ஆழமானவற்றை விடவும் ஆபத்தானவை எனக் குறிப்பிடப்படுகிறது. எனவே, தற்போது ஏற்பட்டுள்ள நிலநடுக்கங்களினால் பின் அதிர்வுகள் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, கடந்த மார்ச். 4 அன்று திபெத்தின் நிலப்பரப்பிலிருந்து சுமார் 5 கி.மீ. ஆழத்தில் 4.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments