கோப்புப் படம் 
தற்போதைய செய்திகள்

டென்மார்க் சென்ற சிறிய விமானம் சுவிட்சர்லாந்தில் விபத்து! 3 பயணிகள் பலி?

சுவிட்சர்லாந்தில் சிறிய விமானம் விபத்துக்குள்ளானதைப் பற்றி...

DIN

டென்மார்க் நாட்டு சிறிய விமானம் சுவிட்சர்லாந்தின் மலைத்தொடரில் மோதி விபத்துக்குள்ளானது.

டென்மார்க் நாட்டைச் சேர்ந்த எக்ஸ்ட்ரா ஈஏ-400 எனும் சிறிய ரக விமானம் ஒன்று கடந்த மார்ச் 13 அன்று சுவிட்சர்லாந்து நாட்டிற்கு வந்தடைந்தது.

இந்நிலையில், நேற்று (மார்ச் 17) மாலை 5.20 மணியளவில் மீண்டும் டென்மார்க் செல்வதற்காக சேம்டன் விமானத் தளத்திலிருந்து புறப்பட்ட போது தென்கிழக்கு சுவிட்சர்லாந்திலுள்ள ஆல்ப்ஸ் மலைத்தொடர்களில் மோதி விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: தெற்கு ஸ்பெயினில் கடும் வெள்ளம்! நிரம்பிய நீர்நிலைகள்...மக்கள் வெளியேற்றம்!

இதனைத் தொடர்ந்து, புறப்பட்ட 2 நிமிடங்களில் இந்த விபத்து நிகழ்ந்து அந்த விமானம் முழுவதுமாக எரிந்து சாம்பலானதாக அந்நாட்டு காவல் துறை தெரிவித்துள்ள நிலையில் அதில் பயணித்த 3 பேரும் பலியாகியிருக்கக் கூடும் என சந்தேகிக்கப்படுகின்றது.

இந்த விபத்துக்கான காரணம் குறித்து தற்போது வரை எதுவும் தெரிவிக்கப்படாத நிலையில் இந்த விமானத்தில் பயணித்தவர்களை முறையாக அடையாளம் காணும் பணி மேற்கொள்ளப்படவுள்ளதாகக் கூறப்படுகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”அந்தக் கேள்வி அவர்கிட்ட கேட்டேன்” விட்டுக் கொடுக்காமல் பேசிய Ravi Mohan!

Ravi Mohan, S.J. Suryah-வை கலாய்த்த Sivakarthikeyan!

வாக்குரிமைப் பேரணி: ராகுலுடன் இணைந்த பிரியங்கா, ரேவந்த் ரெட்டி!

பாகிஸ்தானில் கடும் வெள்ள அபாய எச்சரிக்கை! 24,000 பேர் வெளியேற்றம்!

'வருந்தச் செய்யும்' ஐஆர்சிடிசி டிக்கெட் முன்பதிவு! யாருக்குத்தான் டிக்கெட் கிடைக்கிறது?

SCROLL FOR NEXT