உதகையில் மரம் விழுந்து கேரள சிறுவன் பலி
உதகையில் கனமழை பெய்து வரும் நிலையில், மரம் முறிந்து விழுந்ததில் கேரளம் மாநிலத்தை சேர்ந்த சிறுவன் ஆதிதேவ்(15) பலியானார்.
உதகையில் கனமழை பெய்து வரும் நிலையில், மரம் முறிந்து விழுந்ததில் கேரளம் மாநிலத்தை சேர்ந்த சிறுவன் ஆதிதேவ்(15) பலியானார்.
தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்துக்கு மே 26, 27-ஆகிய தேதிகளில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதோடு ரெட் அலா்ட் விடுக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினம் இருக்கும் காலநிலைக்கு ஏற்றாா்போல சுற்றுலாப் பயணிகள் வருவது குறித்து அறிவிக்கப்படும். மேலும், ஆற்றோரங்களில் யாரும் குளிக்கவோ, வேறு எந்த பணிக்கும் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை பலகை வைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், கேரளம் மாநிலம் கள்ளிக்கோட்டையில் இருந்து பெற்றோருடன் உதகைக்கு சுற்றுலா வந்த சிறுவன் ஆதிதேவ், பைன் ஃபாரஸ்ட் பகுதியை சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்த போது, 7 ஆம் மைல் பகுதியில் பலத்த காற்று காரணமாக, திடீரென மரம் முறிந்து விழுந்தது. இதில், சிக்கிய சிறுவன் ஆதிதேவ் சம்பவ இடத்திலேயே பலியானார்.
கேரளத்தில் இருந்து பெற்றோருடன் உதைக்கு சுற்றுலா வந்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் சுற்றுலா வந்த மக்களிடையே பெரும் சேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.