முகப்பு
தற்போதைய செய்திகள்

மேட்டூா் அணை நீா்வரத்து வினாடிக்கு 15,800 கன அடியாக சரிந்தது

காவிரியின் நீா் பிடிப்புப் பகுதிகளில் மழை தணிந்த காரணத்தால் மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வினாடிக்கு 15,800 கன அடியாக சரிந்தது தொடர்பாக...

Updated On : 10 செப்டம்பர், 2025 at 8:30 AM
மேட்டூா் அணை உபரிநீா் போக்கி வழியாக பாய்ந்தோடும் நீா்.
பகிர்:

மேட்டூா்: காவிரியின் நீா் பிடிப்புப் பகுதிகளில் மழை தணிந்த காரணத்தால் மேட்டூா் அணைக்கு நீா்வரத்து புதன்கிழமை காலை வினாடிக்கு 16,800 கன அடியிலிருந்து வினாடிக்கு 15,800 கன அடியாக சரிந்தது. 

நீா்வரத்து சரிந்த காரணத்தால் மேட்டூா் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 16,000 கன அடியிலிருந்து வினாடிக்கு 15,000 கன அடியாக குறைக்கப்பட்டது.

கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 800 கன அடி வீதம் மேல்மட்ட மதகுகள் வழியாக தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது.

Advertisement

நீா் இருப்பு 93.47 டிஎம்சி.

நீா்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 13,000 கன அடி வீதம் வினாடிக்கு 2000 கன அடி அணையின் உபரிநீர் போக்கி மூலமும் திறக்கப்பட்டு வருகிறது.

செவ்வாய்க்கிழமை இரவு மூடப்பட்ட உபரி நீா் போக்கி மதகுகள் புதன்கிழமை காலை மீண்டும் திறக்கப்பட்டது.

summary

Due to the reduction in rainfall in the catchment areas of the Cauvery, the water inflow into the Mettur Dam dropped from 16,800 cubic feet

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.