கிழக்கு கடற்கரை பகுதியில் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை மீன்பிடித் தடை காலம்!
கிழக்கு கடற்கரை பகுதியில் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை மீன்பிடித் தடை காலம் குறித்து...
கிழக்கு கடற்கரை பகுதியில் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை மீன்பிடித் தடை காலம் அமலில் இருக்கும் என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குப்படுத்தும் சட்டம் 1983-இன் கீழ் 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை மீன்பிடி தடைக்காலம் 61 நாள்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த மீன்பிடி தடைக்காலத்தில் தமிழக கடலோர பகுதிகளில் உள்ள மீன்பிடி விசைப்படகுகள் மற்றும் இழுவலைப்படகுகள் மீன்பிடி துறைமுகம், தங்குதளத்தில் இருந்து கடலில் மீன்பிடிக்க செல்ல வேண்டும் எனவும் அண்டை மாநிலமான ஆந்திரத்தில் மீன்பிடி தடைகாலத்தில் இயந்திரம் பொருத்தப்பட்ட அனைத்து வகை மீன்பிடி கலன்கள் கடலில் மீன்பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை மாவட்டத்தில் உள்ள இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப்படகுகள் ஆந்திர மாநில கடற்பகுதிக்கு கண்டிப்பாக செல்லக்கூடாது.
Advertisement
Advertisement
கிழக்கு கடற்கரை மீன்பிடி தடைகாலம் அமலுக்கு முன்னர் ஏப்.14 இரவு 12 மணிக்குள் கடலுக்கு சென்ற மீன்பிடி விசைப்படகுகள் அனைத்தும் கட்டாயம் கரைக்கு திரும்பிட வேண்டும்.
அன்று இரவு 12 மணிக்கு பிறகு திரும்பும் மீன்பிடி விசைப்படகுகள் மீது தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983-ன்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சென்னை மாவட்ட மீன்பிடி விசைப்படகு உரிமையாளர்களுக்கு ஆட்சியர் கூறியுள்ளார்.
Fishing Ban Period on the East Coast from April 15 to June 14
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.