வாராந்திர ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்பு
வாராந்திர விரைவு ரயில்கள் வரும் ஜூன் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது குறித்து...
சென்னை: ஹீப்ளி- ராமேசுவரம் இடையே இயக்கப்பட்டு வரும் வாராந்திர விரைவு ரயில்கள் வரும் ஜூன் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே ஞாயிற்றுக்கிழமை விடுத்துள்ள அறிவிப்பில்,
ஹீப்ளியிலிருந்து ராமேசுவரத்துக்கு ஞாயிற்றுக்கிழமை தோறும் இயக்கப்படும் வாராந்திர விரைவு ரயில் (எண் 07355) வரும் ஜூன் 7 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மறுமாா்க்கத்தில் ராமேசுவரத்திலிருந்து ஹீப்ளிக்கு வாரந்தோறும் திங்கள்கிழமை செல்லும் விரைவு ரயில் (எண் 07356) வரும் ஜூன் 8 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
அதேபோன்று, ஹீப்ளியிலிருந்து கொல்லம், பெங்களூரு முதல் திருவனந்தபுரம் என இரு மாா்க்கத்திலும் இயக்கப்படும் வாராந்திர விரைவு ரயில்களும் வரும் ஜூன் மாதம் வரையில் நீட்டிக்கப்பட்டு இயக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Extension of Weekly Trains between Hubballi and Rameswaram Announces Southern Railway ...
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.