தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! எவ்வளவு?
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை காலை சவரனுக்கு ரூ. 1,200 அதிரடியாக குறைந்துள்ளது குறித்து...
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை காலை சவரனுக்கு ரூ. 1,200 அதிரடியாக குறைந்துள்ளது.
சர்வதேச போர் பதற்றம், தங்கத்தின் மீதான இறக்குமதி வரி உயர்வு உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு (8 கிராம்) ரூ.1200-ம், கிராமுக்கு ரூ.150 குறைந்துள்ளது.
Advertisement
Advertisement
அதன்படி, ஒரு கிராம் தங்கம் ரூ.14,500-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.1,16,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று புதன்கிழமை, ஒரு சவரன் தங்கம் ரூ.1,17,200-க்கும், ஒரு கிராம் ரூ.14,650-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
வெள்ளி விலை நிலவரம்
அதேபோன்று, வெள்ளி விலையும் அதிரடியாக கிலோவுக்கு ரூ. 5,000 குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.285-க்கும், ஒரு கிலோ ரூ.2,85,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த ஆண்டின் இதே நாளில் தங்க விலை நிலவரம்
கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் தங்கம் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. 2025 மே 28 ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.71,480-க்கும், ஒரு கிராம் ரூ.8,935-க்கும் விற்பனையானது, 2026 மே 28 ஆம் தேதி ஒரு சவரன் ரூ.1,16,000-க்கும், ஒரு கிராம் ரூ.14,500-க்கும் உயர்ந்துள்ளது. ஒரு சவரனுக்கு ரூ.44,520 உயர்ந்துள்ளது. சுமார் 62.2% அதிகரித்துள்ளது.
கடந்த ஐந்து நாள்களுக்கான தங்கம் விலை நிலவரம்
மே 27: 1 சவரன் - ரூ.1,17,200, 1 கிராம் - ரூ.14,650
மே 26: 1 சவரன் - ரூ.1,17,840, 1 கிராம் - ரூ. 14,730
மே 25: 1 சவரன் - ரூ. 1,18,240,1 கிராம் - ரூ. 14,780
மே 23: 1 சவரன் - ரூ. 1,17,840,1 கிராம் - ரூ. 14,730
மே 22: 1 சவரன் - ரூ. 1,18,240, 1 கிராம் - ரூ. 14,780
கடந்த ஐந்து நாள்களுக்கான வெள்ளி விலை நிலவரம்
மே 27: 1 கிராம் - ரூ. 290
மே 26: 1 கிராம் - ரூ. 295
மே 25: 1 கிராம் - ரூ. 295
மே 23: 1 கிராம் - ரூ. 295
Gold has plunged by Rs 1200 per sovereign and Rs 150 per gram on May 28 in the city.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.