FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தற்போதைய செய்திகள்

நடிகர் அஜித்குமார் தாயார் மறைவு: தலைவர்கள் இரங்கல்

தமிழ்த் திரைப்பட நடிகர் அஜித்குமார் தாயார் மோகினி மறைவுக்கு தலைவர்கள் தெரிவித்துள்ள இரங்கல் குறித்து...

நடிகர் அஜித்குமார் தாயார் மறைவு - அன்புமணி இரங்கல் - எக்ஸ்
பகிர்:

தமிழ்த் திரைப்பட நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக உள்ளவர் அஜித்குமார். இவரது தாயார் மோகினி(84). இவர் சென்னை பாலவாக்கத்தில் வசித்து வந்தார். வயது மூப்பின் காரணமாக இன்று (சனிக்கிழமை) காலை சென்னையில் தனியார் மருத்துவமனையில் காலமானார்.

அஜித் தாயாரின் மறைவுக்கு திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள், பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

முதல்வர் ஜோசப் விஜய் இரங்கல்

இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

அருமை நண்பர் அஜித் குமாரின் தாயார் மோகினி அம்மையார் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.

வாழ்வில் அனைத்து நிலைகளிலும் அரணாக இருந்து அரவணைத்த தாயாரை இழந்து வாடும் நண்பர் அஜித் குமாருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என அவர் கூறியுள்ளார்.

மு.வீரபாண்டியன்(இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி)

நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வருத்தத்தையும், துயரத்தையும் தருகிறது.

அவரது மறைவுச் செய்தி திரைத்துறையினரையும், ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மோகினி மணி மறைவிற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அஞ்சலியை செலுத்துகிறது.

அவரை பிரிந்து வாடும் நடிகர் அஜித் குமார், அவரது வாழ்க்கை இணையர் நடிகர் ஷாலினி மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது.

கமல்ஹாசன்(மநீம)

சகோதரர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி மறைந்த செய்தி அறிந்து வருத்தமடைந்தேன்.

அன்புத் தாயை இழந்து தவிக்கும் அஜித்குமாருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எனது மனமார்ந்த ஆறுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

எடப்பாடி கே.பழனிசாமி(அதிமுக)

திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகரும், கார் பந்தய வீரருமான சகோதரர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயருற்றேன்.

பாசமிகு தாயாரை இழந்து வாடும் அஜித்குமாருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த மோகினி மணியின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

மு.க.ஸ்டாலின் (திமுக)

அன்புச் சகோதரர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி அவர்கள் மறைந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன்.

உயிர்கொடுத்து, தான் உயரங்கள் தொட்டதைப் பார்த்து மகிழ்ச்சி கொண்ட அன்னையினை இழந்து வாடும் அஜித்குமார் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை.

அன்னையுடனான அழகிய தருணங்களே இந்தத் துயரில் அவர் மீளத் துணைநிற்க விழைகிறேன். அஜித்குமாருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலும் ஆறுதலும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புமணி(பாமக)

தமிழ்த் திரைப்பட நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி உடல்நலக் குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

தாய் மீது நடிகர் அஜித்குமார் கொண்டிருந்த அன்பை நான் அறிவேன். உலகில் எவராலும் தாங்கிக் கொள்ள முடியாத இழப்பு என்பது தாயாரின் மறைவு தான்.

அன்னையை இழந்து வாடும் நடிகர் அஜித்குமார் உள்ளிட்ட குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஏ.சி. சண்முகம்(புதிய நீதிக் கட்சி)

அன்புச் சகோதரர் அஜித் குமாரின் அன்புத் தாயார் மோகினி மணி மறைந்த செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.

தாயை இழக்கும் துயரம் ஈடு செய்ய முடியாதது; ஒரு மகனின் வாழ்வின் ஒவ்வொரு வெற்றிக்கும் பின்னால் இருக்கும் ஊக்கசக்தி அன்னையின் ஆசிகளே.

வாழ்வின் சிகரங்களைத் தொட்ட உங்களைப் பார்த்து உங்கள் தாயார் பெருமைப்பட்ட தருணங்கள், உங்கள் இதயத்தில் என்றும் நீங்காமல் நிலைத்திருக்கும். பிரிவின் துயர் பெரிது என்றாலும், அன்னையின் நற்பண்புகளும் அவர் உங்களுக்கு ஊட்டிய துணிச்சலுமே இந்த சோதனையான காலக்கட்டத்தில் உங்களை தாங்கிப் பிடிக்கும்.

அன்னையை இழந்து வாடும் நடிகர் அஜித்குமார் உள்ளிட்ட குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்கள் குடும்பத்தினர் அனைவரும் இந்தத் துயரத்திலிருந்து மீண்டு வரவும், தாயாரின் ஆன்மா சாந்தியடையவும் இறைவனை வேண்டுகிறேன் என கூறியுள்ளார்.

summary

Regarding the condolences expressed by various leaders on the passing of Mohini, mother of Tamil film actor Ajith Kumar...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments