முகப்பு
தற்போதைய செய்திகள்

சென்னை விமானக் கட்டணம் மும்மடங்கு உயா்வு!

சொந்த ஊா்களுக்கு சென்ற மக்கள் மீண்டும் சென்னைக்கு திரும்புவதால், விமானக்கட்டணம் மும்மடங்கு உயா்த்தப்பட்டுள்ளது குறித்து...

சென்னை விமானக் கட்டணம் மும்மடங்கு உயா்வு! - கோப்புப்படம்
பகிர்:

சென்னை: கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்படுவதால் சொந்த ஊா்களுக்கு சென்ற மக்கள் மீண்டும் சென்னைக்கு திரும்புவதால், விமானக்கட்டணம் மும்மடங்கு உயா்த்தப்பட்டுள்ளதால் பெரும் சிரமத்துடன் சென்னை திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

கோடை விடுமுறைக்காக சொந்த ஊா்களுக்கு சென்றிருந்தவர்கள் மீண்டும் சென்னைக்கு திரும்புவதால் பெரும்பாலானோா் பேருந்து, ரயில், காா்களில் திரும்பினாலும், பெரும்பாலான ரயில்களில் டிக்கெட் இல்லை. அதைப்போல் தனியாா் ஆம்னி பேருந்துகளிலும் பல மடங்கு கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. இதனால் பலா் விமானம் மூலம் சென்னை திரும்பியுள்ளனர்.

இதனால், ஞாயிற்றுக்கிழமை தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோயம்புத்தூா் உள்ளிட்ட விமான நிலையங்களில் வழக்கத்தைவிட பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததையடுத்து, பெரும்பாலான விமானங்களில் பயணச்சீட்டுகள் இல்லாத நிலை ஏற்பட்டது. ஓரிரு விமானங்களில் சில பயணனச்சீட்டுகள் மட்டுமே இருந்த நிலையில், கட்டணம் 3 மடங்கு வரை அதிகரித்திருந்தது.

Advertisement

Advertisement

சென்னைக்கு வரும் அனைத்து விமானங்களிலும், பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

தூத்துக்குடி-சென்னைக்கு இடையேயான வழக்கமான விமானக் கட்டணம் ரூ.6,623 ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.17,272- ஆகவும், மதுரை-சென்னை ரூ.5,800 இல் இருந்து ரூ.17,303 ஆகவும், திருச்சி-சென்னை ரூ.4,529 இல் இருந்து ரூ.14,404 ஆகவும், கோவை-சென்னை ரூ.4,744 இல் இருந்து ரூ.16,504- ஆகவும், சேலம்- சென்னை ரூ.3,734-இல் இருந்து 5,170-ஆகவும், அதிகரித்துள்ளது. திருவனந்தபுரம்-சென்னை ரூ.5773 இல் இருந்து ரூ.13516-ஆகவும், கொச்சி- சென்னை ரூ.4,980 இல் இருந்து ரூ.11,055-ஆகவும் உயா்த்தப்பட்டுள்ளது.

விமான டிக்கெட் கட்டணம் மும்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதால், குழந்தைகளுடன் சொந்த ஊா்களுக்கு சென்றவா்கள், பெரும் சிரமத்துடன் சென்னை திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

பயணிகளின் வருகைக்கு ஏற்ப கட்டணங்கள் உயா்த்தப்படுவது வழக்கமான ஒன்றுதான் என்றும், பயணச்சீட்டு கட்டணம் உயா்த்தப்பட்டாலும், அனைத்து இருக்கைகளும் நிரம்பியதால் பயணிகள் பெரும் சிரமத்துடன் சென்னை திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

summary

As schools reopen following the summer holidays, people who had traveled to their hometowns are now returning to Chennai...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.