முகப்பு
அழகிய இல்லம்

வீட்டைப் பராமரிக்க ஒரு அட்டவணை!

வீட்டைப் பராமரிக்க ஒரு அட்டவணை போட்டுக்கொண்டு அதன்படி செயல்படுத்தலாம்.

Updated On : 18 பிப்ரவரி 2026, 11:46 am IST
வீட்டை சுத்தமாக பராமரிக்க.. - ENS
பகிர்:

வீட்டைக் கட்டிப் பார் என்பார்கள். ஆனால், வீட்டை ஒரு முறை கட்டிவிடலாம். ஆனால் வீட்டை நல்லமுறையில் பராமரித்தல்தான் உண்மையில் கடினம். உரிய முறையில் வீட்டை பராமரித்தால்தான் எப்போதும் புதுப்பொலிவோடு இருக்கும்.

அவ்வாறு கட்டி வீட்டை புதுப்பொலிவோடு வைத்திருக்க சில சின்ன சின்ன யோசனைகள்..

மாதம்தோறும் ஒரு நாளை ஒதுக்கி அது இரண்டாவது ஞாயிறு, இரண்டாவது சனி அல்லது மூன்றாவது சனி அல்லது ஞாயிறு என நாளை குறித்து வைத்துக் கொண்டு மறக்காமல் ஒட்டடை அடிக்க வேண்டும்.

Advertisement

கதவின் கீறல்கள், சப்தமிடுதல், மரம் விரிவடையும்போது கதவு சரிவர மூடாமல் இருப்பது போன்றவை முக்கிய பிரச்னைகள். மழைக்காலங்களில் அதிக அளவில் இருக்கும். கீல்களின் சப்தத்தை நிறுத்த கிரீஸ், தேங்காய் எண்ணெயை பயன்படுத்தலாம்.

உப்பு காகிதத்தைப் பயன்படுத்தி, கதவுகளை அவ்வப்போது தேய்த்து மென்மையாக்கலாம். இதனால் கதவுகள் நன்றாக மூடும்.

சுவர்களில் கறைகள் படியும். இது அறைக்கு அறை மாறுபடும். ஒரே நாளில் அனைத்தையும் துடைத்து எடுத்து விட முடியாது. எனவே, இவற்றை அவ்வப்போது சரியாகக் கவனித்து, தரமான ஸ்டெயின் கிளீனரை பயன்படுத்தி அகற்ற வேண்டும்.

வீட்டிலுள்ள தண்ணீர் பைப்புகளில் தண்ணீர் எளிதாக வருவதற்கு சிறிய அளவிலான பில்டர் இணைக்கப்பட்டிருக்கும். உப்புத் தண்ணீரை பயன்படுத்தும்போது, அதில் உப்பு படிந்து தண்ணீர் வரத்து குறையும். அவ்வப்போது பில்டரை கழற்றி சுத்தம் செய்யலாம். குழாய்கள், ஷவர்களை அவ்வப்போது சுத்தம் செய்வதும் நல்லது.

தினசரி அல்லது வாரந்தோறும் வழக்கமாக சில சுத்தப்படுத்தும் முறைகளை நாம் பின்பற்றுவோம். அதைப் போன்று, வீட்டு உபயோகப் பொருள்களையையும் வாரத்தில் ஒரு நாள் ஒதுக்கி சுத்தம் செய்வது நல்லது.

பிரிட்ஜ் இந்த வாரம், அடுத்த வாரம் மிக்ஸி, அதற்கடுத்த வாரம் வாஷிங் மெஷின் என வாரத்தில் ஒரு நாளை ஒரு பொருளை சுத்தம் செய்யும் நாளாக கடைப்பிடிக்கலாம்.

- சௌமியா

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.