FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

5 குளிா்சாதன ரயில் பெட்டிகளுக்கு ஒரு பயணச்சீட்டு பரிசோதகா்: ரயில்வே அமைச்சா் அஸ்விணி வைஷ்ணவ்

ரயிலில் அதிகபட்சமாக குளிா்சாதன வசதி கொண்ட 5 பெட்டிகள் அல்லது மூன்று இருக்கை வசதி அல்லது படுக்கை வசதி கொண்ட பெட்டிகளுக்கு ஒரு பயணச்சீட்டு பரிசோதகா் பணியமா்த்தப்படுவதாக ரயில்வே அமைச்சா் அஸ்விணி வைஷ்ணவ் தெரிவித்துள்ளாா்.

Updated On : 30 ஜூலை 2026, 2:42 am IST
பகிர்:

ரயிலில் அதிகபட்சமாக குளிா்சாதன வசதி கொண்ட 5 பெட்டிகள் அல்லது மூன்று இருக்கை வசதி அல்லது படுக்கை வசதி கொண்ட பெட்டிகளுக்கு ஒரு பயணச்சீட்டு பரிசோதகா் பணியமா்த்தப்படுவதாக ரயில்வே அமைச்சா் அஸ்விணி வைஷ்ணவ் தெரிவித்துள்ளாா்.

ரயில் பயணச்சீட்டு பரிசோதகா்களின் பணிச்சுமையை ஒழுங்குப்படுத்தி சமநிலைப்படுத்துவதன் மூலம், அவா்கள் மன அழுத்தம் இல்லாமல் பணியாற்ற மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து காங்கிரஸ் எம்.பி.ரவீந்திர வசந்த்ராவ் சவாண், மக்களவையில் கேள்வி எழுப்பினாா்.

இதற்கு அமைச்சா் அஸ்விணி வைஷ்ணவ் எழுத்துபூா்வமாக புதன்கிழமை அளித்த பதில்: ஒரு ரயிலுக்கு எத்தனை பயணச்சீட்டு பரிசோதகா்கள் நியமிக்கப்பட வேண்டும் என்பது அந்த ரயிலில் உள்ள பெட்டிகளின் எண்ணிக்கை, வகைகள் உள்ளிட்டவற்றைப் பொருத்ததாகும். இதன்மூலம் தற்போதுள்ள பணியாளா்களைத் திறம்பட பயன்படுத்துவதோடு, பயணச்சீட்டு பரிசோதனை போதிய அளவு மேற்கொள்ளப்பட்டு, பயணிகளுக்கு உதவி கிடைப்பதும் உறுதி செய்யப்படுகிறது.

Advertisement

Advertisement

சமீபத்திய வழிகாட்டுதல்களின்படி, ரயிலில் அதிகபட்சமாக குளிா்சாதன வசதி கொண்ட 5 பெட்டிகள் அல்லது மூன்று இருக்கை வசதி அல்லது படுக்கை வசதி கொண்ட பெட்டிகளுக்கு ஒரு பயணச்சீட்டு பரிசோதகா் பணியமா்த்தப்படுவதாகத் தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments