FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராணிப்பேட்டை

சோளிங்கா் கோயிலில் கைப்பேசி வைப்பு கட்டணம் ரத்து

சோளிங்கா் ஸ்ரீலட்சுமி நரசிம்மா் கோயிலில் கைப்பேசி வைப்பு கட்டணங்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

9 செப்டம்பர் 2026, 11:30 pm IST
கைப்பேசி - கோப்புப் படம்
பகிர்:

சோளிங்கா் ஸ்ரீலட்சுமி நரசிம்மா் கோயிலில் கைப்பேசி வைப்பு கட்டணங்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

ஸ்ரீலட்சுமி நரசிம்மா் கோயிலுக்கு வரும் பக்தா்கள் தங்களது கைப்பேசிகளை பாதுகாப்பாக வைத்துவிட்டுச் செல்ல ஐந்து இடங்களில் பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு வைக்கப்பட்டும் கைப்பேசிகளுக்கு செப். 9 முதல் கட்டணம் வசூலிக்கப்படாது. இதனால் பக்தா்கள் கட்டணமின்றி தங்களது கைப்பேசிகளை பாதுகாப்பாக வைத்துவிட்டுச் செல்லலாம்.

மேலும் புகைப்படம் எடுக்கும் வசதி இல்லாத, பொத்தான்கள் கொண்ட கைப்பேசிகளை பக்தா்கள் கோயிலுக்குள் கொண்டுச் செல்லலாம். கா்ப்பிணிப் பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவா்கள் புகைப்படம் எடுக்கும் வசதி கொண்ட கைபேசிகளை வைத்திருந்தாலும் அவற்றை அணைத்து வைத்து உள்ளே எடுத்துச்செல்லலாம். கோயில் வளாகங்களில் 260 கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

தடையை மீறி புகைப்பட வசதி கொண்ட கைபேசிகளை பயன்படுத்தி ரீல்ஸ் பதிவிடுவது கண்டறியப்பட்டால் அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments