FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
அழகிய இல்லம்

உண்மையில் ரோபோ வாக்யூம் க்ளீனர்களை வாங்கலாமா? மீம்ஸ்களால் குழப்பம்

ரோபோ வாக்யூம் க்ளீனர்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பது பற்றி..

Updated On : 19 ஜூன் 2026, 11:00 am IST
பகிர்:

வீட்டின் தரைப் பகுதியை சுத்தமாக வைத்திருப்பது, எப்போதுமே சுத்தமாக வைத்திருப்பது என்பது வீட்டின் பராமரிப்பாளர்களுக்கு சவாலான வேலைதான்.

ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டிய பணிகளில், தரையை பெருக்கி சுத்தம் செய்வது மற்றும் துடைத்து எடுப்பது என்பது தலையாய பணி. இது வீட்டில் உள்ள நபர்களுக்கு ஏற்ப நாள்தோறும் அல்லது வாரத்தில் இரண்டு நாள்கள் செய்யலாம்.

அதிலும் குறிப்பாக மூலை முடுக்கெல்லாம் ஒளிந்துகொள்ளும் அழுக்குகளையும் விடாப்பிடியான கறைகளையும் நீக்குவதற்கு தனிக் கவனம் செலுத்த வேண்டும்.

Advertisement

Advertisement

தற்போது விடியோக்களில் பார்க்கும் ரோபோ வாக்யூம் கிளீனர்கள், ஆன் செய்துவிட்டால் வீடு முழுக்கப் பெருக்கி சுத்தப்படுத்திவிட்டு, தானாகவே அதன் இடத்தில் போய் இருந்து கொள்கிறது. இது அந்த வாக்யூம் கிளீனர்களின் விளம்பர விடியோக்கள் இப்படி இருக்கின்றன.

சில ரோபோ வாக்யூம் க்ளீனர்கள் பெருக்கி, தரையை சுத்தம் செய்யும், சேகரித்த குப்பைகளே தானே வெளியேற்றும், சுத்தப்படுத்திய துணிகளை தூய்மையாக்கிக் கொள்ளும், உலர்ந்த காற்றைக் கொண்டு உலர்திக்கொள்ளும் என்றும் விளம்பரப்படுத்தப்படுகின்றன.

ஆனால், அதனை வாங்கிப் பயன்படுத்துவோரின் மீம்ஸ் விடியோக்கள் வேறு மாதிரி உள்ளன. வாக்யூம் கிளீனர்கள் தரைய சுத்தப்படுத்துவதற்கு முன்பு, தரையில் உள்ள பொருள்களை நாம் எடுத்து ஓரமாகவோ ஒன்றுக்கு மேல் ஒன்று வைத்தோ சுத்தப்படுத்த வேண்டும். அப்போதுதான் அதனால் சுத்தம் செய்ய முடியும் என்பது போன்ற விடியோக்கள் வருகின்றன.

மேலும், மூலை முடுக்குகளில் இருக்கும் குப்பைகளை பெருக்கவோ சுத்தப்படுத்தவோ இயலாது. அவற்றை நாம்தான் சுத்தப்படுத்த வேண்டும் என்றும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments