சாவியே கிடையாது! வீட்டின் கதவுகளுக்கு ஸ்மார்ட் பூட்டு!
சாவியே கிடையாது, டிஜிட்டல் முறைகளில் வீட்டின் கதவுகளுக்கு ஸ்மார்ட் பூட்டுகள் வந்துவிட்டன.
எவ்வளவு பெரிய வீடாக இருந்தாலும், அதன் கதவுகளுக்கும், நுழைவு வாயிலின் கேட் பகுதியில் போடப்படும் பூட்டுகளுமே மொத்த பாதுகாப்பையும் உறுதி செய்கின்றன.
எனவே, வீட்டின் பூட்டுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியிருக்கும் இந்தக் காலத்தில் தொழில்நுட்பமும் இதற்கு உதவத் தொடங்கியிருக்கிறது. முதலில், சாவி கிடையாது. இதனால் சாவி தொலைவது, மறைத்து வைத்து செல்வது, வீட்டில் இருக்கும் அனைவருக்கும் சாவி இருக்க வேண்டிய அவசியம் போன்றவை இல்லாமல் போகும்.
ஸ்மார்ட் கதவுப் பூட்டுகள், ஒரு வீட்டிற்குப் பல அடுக்கு பாதுகாப்பை கொடுப்பதோடு, அன்றாட வீட்டில் இருப்பவர்கள் வெளியே சென்று வருவதையும் எளிதாக்குகிறது என்கிறார்கள்.
Advertisement
Advertisement
எப்போதும் பயன்படுத்தும் பூட்டு சாவிகளை மட்டும் சார்ந்திருப்பதற்குப் பதிலாக, இந்தப் பூட்டுகள் கைரேகை வைத்தால் திறப்பது, குறிப்பிட்ட எண்களைக் கொண்டு பின் குறியீடுகள், அல்லது அலுவலக ஆக்ஸஸ் கார்டுகள், செல்போனில் ஓடிபி பெறுவது, ஸ்மார்ட்போன் மூலம் திறப்பது, சில நுணுக்கமான திறப்புகள் மூலம் கதவினைத் திறப்பது என பல வழிகளைக் கையாளலாம்.
அதுவும் விலை அதிகமாக இருக்குமோ என்று எண்ண வேண்டாம். கிட்டத்தட்ட ரூ.10 ஆயிரத்துக்குள்ளேயே இந்த நவீன டிஜிட்டல் பூட்டு வசதிகள் கிடைக்கின்றனவாம்.
அது மட்டுமல்ல, பல அடுக்கு திறப்பு வசதிகளும் வருகின்றனவாம். வைஃபையில் இயங்கும் பூட்டு, ப்ளூடூத் அல்லது செல்போன் செயலி மூலம் இயங்கும் பூட்டுகளும் வந்துவிட்டன.
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், ஒரே டிஜிட்டல் பூட்டில் பல்வேறு வகையான திறப்பு முறைகளையும் மேற்கொள்ள முடியுமாம். அதாவது, கைரேகை வைத்து பிறகு செல்போன் செயலிகள் மூலம் திறக்கும் வசதியும் இணைத்துக் கொள்ளலாம்.
எனவே வீட்டில் பாதுகாப்பை உறுதி செய்ய விரும்புவோர், புதிதாக வீடு கட்டுவோர் இந்த புதிய பூட்டு முறைகளைப் பயன்படுத்தலாம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.