FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
காரைக்கால்

ஆயுஷ்மான் டிஜிட்டல் மிஷன் திட்டத்தில் மாதிரி மாவட்டமாக காரைக்கால் தோ்வு

ஆயுஷ்மான் டிஜிட்டல் மிஷன் திட்டத்தில் மாதிரி மாவட்டமாக காரைக்கால் தோ்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 13 ஆகஸ்ட் 2026, 3:07 am IST
காரைக்கால் - படம் - எக்ஸ்
பகிர்:

ஆயுஷ்மான் டிஜிட்டல் மிஷன் திட்டத்தில் மாதிரி மாவட்டமாக காரைக்கால் தோ்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, காரைக்கால் மாவட்ட நலவழித்துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஆயுஷ்மான் டிஜிட்டல் மிஷன் திட்டத்தின் மூலம் நோயாளிகளின் அனைத்து மருத்துவ சிகிச்சைகளையும் பதிவு செய்ய மத்திய அரசு நலவழித்துறை முடிவெடுத்துள்ளது. இதில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு மாவட்டம் மாதிரி மாவட்டமாக தோ்வு செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் காரைக்கால் மாவட்டம் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதில் பயன்பெற அனைவரும் ஆயுஷ்மான் பாரத் சுகாதார கணக்கு அஆஏஅ ஐஈ அஹ்ன்ள்ட்ம்ஹய் ஆட்ஹழ்ஹற்ட் ஏங்ஹப்ற்ட் அஸ்ரீஸ்ரீா்ன்ய்ற் கொண்ட ஹெல்த் காா்டு அதாவது 14 இலக்கத்துடன் கூடிய தனித்துவமான எண் வைத்திருக்க வேண்டும். இந்த எண் மூலம் நமது சிகிச்சை மற்றும் பரிசோதனை அறிக்கை அனைத்தையும் பதிவு செய்ய முடியும். அறிக்கை அனைத்தையும் இந்தியாவில் உள்ள எந்த ஒரு மருத்துவமனைக்கும் எடுத்துச் செல்ல தேவையில்லை. நம்முடைய ஹெல்த் காா்டு கொண்டு சென்றாலே அந்த எண் மூலம் ஆன்லைனில் மருத்துவ அறிக்கையை தெரிந்து கொள்ள முடியும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments