FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

புதிய மென்பொருளை அறிமுகம் செய்த சாம்சங் கேலக்ஸி அல்ட்ரா 2 ஸ்மார்ட் வாட்ச்!

குறைகளை ஆராய்ந்து மேம்படுத்தப்பட்ட புதிய மென்பொருளை சாம்சங் கேலக்ஸி அல்ட்ரா 2 ஸ்மார்ட் வாட்ச் அறிமுகம் செய்துள்ளது குறித்து...

2 செப்டம்பர் 2026, 6:18 pm IST
சாம்சங் கேலக்ஸி அல்ட்ரா 2 ஸ்மார்ட் வாட்ச் - படம் / நன்றி - சாம்சங்
பகிர்:

முந்தைய குறைகளை ஆராய்ந்து மேம்படுத்தப்பட்ட புதிய மென்பொருளை சாம்சங் கேலக்ஸி அல்ட்ரா 2 ஸ்மார்ட் வாட்ச் அறிமுகம் செய்துள்ளது.

சாம்சங் கேலக்ஸி அல்ட்ரா 2 ஸ்மார்ட் வாட்ச் மீதான பயனர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில், இந்த தகவல் வெளியாகியுள்ளது. இதுமட்டுமின்றி சாம்சங் கேலக்ஸி வாட்ச் 9 குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, இரு வகை ஸ்மார்ட் வாட்ச்களிலுமே பாதுகாப்பு அம்சங்கள் மட்டுமே மேம்படுத்தப்பட்டுள்ளன. மற்ற அனைத்து அம்சங்களும் முன்பு இருந்ததைப்போன்றே இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இதுமட்டுமின்றி சாம்சங் ஸ்மார்ட் வாட்ச்சை வைத்திருப்பவர்கள் தங்கள் மென்பொருளை மேம்படுத்திக்கொள்ளும் வாய்ப்பையும் சாம்சங் வழங்கியுள்ளது.

கேலக்ஸி ஸ்மார்ட் வாட்ச்களின் புதிய அப்டேட்களை அறிந்துகொள்ள, கேலக்ஸி வியரபிள் செயலியை (Galaxy Wearable app) பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.

இதில் வாட்ச் செட்டிங் சென்று சாஃப்ட்வேர் அப்டேட் என்பதை கிளிக் செய்ய வேண்டும். பிறகு அதில் புதிய மேம்பாடுகள் என்னவென்பது தோன்றும். அதனை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்துகொள்ளலாம் என சாம்சங் தெரிவித்துள்ளது.

summary

samsung Galaxy Watch Ultra 2 Gets First Update

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments