பளபளப்பான சருமத்திற்கு 'மஞ்சள் தூள்' போதும்!
சிறந்த கிருமிநாசினியாக அனைத்து அழகுப் பொருள்களிலும் பயன்படுத்தப்படும் மஞ்சள் தூளைப் பயன்படுத்தி பொலிவான சருமத்தைப் பெறலாம்.
சிறந்த கிருமிநாசினியாக அனைத்து அழகுப் பொருள்களிலும் பயன்படுத்தப்படும் மஞ்சள் தூளைப் பயன்படுத்தி பொலிவான சருமத்தைப் பெறலாம்.
நேரடியாக மஞ்சள் கிழங்குகளை பயன்படுத்துவது மிகவும் சிறந்தது என்று கூறுகின்றனர் முன்னோர்கள்.
தற்போது பலரும் கஸ்தூரி மஞ்சளைப் பயன்படுத்துவதால் அத்துடன் சில பொருள்களை சேர்த்து பயன்படுத்தினால் சருமம் பளபளப்பாகும்.
Advertisement
Advertisement
மஞ்சள் தூளுடன் சிறிதளவு கற்றாழை ஜெல்லை சேர்த்து முகத்தில் பூசிவர முகப்பருக்கள் முறையும். முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் கொஞ்சம் கொஞ்சமாக மறையும்.
கஸ்தூரி மஞ்சளுடன் சிறிதளவு பால் சேர்த்து முகத்தில் பேக் போடுங்கள்.
இதையும் படிக்க | நகரத்துப் பெண்களுக்கு குழந்தை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு குறைவு! ஏன்?
அதுபோன்று பப்பாளிப் பழச்சாறு சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி நீர்ச்சத்தைத் தரும். அத்துடன் சிறிதளவு கஸ்தூரி மஞ்சள், பால், தேன் கலந்து முகத்தில் பேக் போடலாம்.
கஸ்தூரி மஞ்சளுடன் சிறிதளவு எலுமிச்சைச் சாறு கலந்தும் பேஸ் பேக்காக பயன்படுத்தலாம்.
தேன், மஞ்சள் தூள், ரோஸ் வாட்டர் கலந்து தினமும் முகத்திற்கு பயன்படுத்துங்கள். சருமம் பொலிவு பெறும்.
உருளைக்கிழங்குச் சாறு, தக்காளிச் சாறு - இவற்றுடனும் கஸ்தூரி மஞ்சள் சேர்த்து தடவிவர முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைந்துவிடும்.
இதையும் படிக்க | வீட்டிலேயே செய்யலாம்...கேரட் பேஷியல்!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.