பாட்டில் சேலஞ்சை அடுத்து டிக் டாக்கில் களை கட்டும் சைக்கிளோ சைக்கிள் சேலஞ்ச்!
டிக் டாக் பிரபலங்கள் பலரும் தங்களது சைக்கிளோ சைக்கிள் விடியோவைப் பதிவேற்றி வருகிறார்கள். ஆதிவாசி கானா பாடல் ரகத்தைச் சேர்ந்த இந்தப் பாடல்
சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் களை கட்டிய பாட்டில் சேலஞ்சை அடுத்து தற்போது சைக்கிளோ சைக்கிள் சேலஞ்ச் எனும் புது விதமான சேலஞ்ச் படு விரைவாக இணையத்தில் பரவி வருகிறது.
டிக் டாக் பிரபலங்கள் பலரும் தங்களது சைக்கிளோ சைக்கிள் விடியோவைப் பதிவேற்றி வருகிறார்கள். ஆதிவாசி கானா பாடல் ரகத்தைச் சேர்ந்த இந்தப் பாடல் நாட்டுப்புறப் பாடல்களுக்குண்டான குதூகலத்துடன் ஒலிக்கிறது.
குழந்தைகள் கைகளை சைக்கிள் ஹேண்ட்பார்களைப் போல வைத்துக் கொண்டு சைக்கிள் ஓட்டுவது போன்றதான பாவனையுடன் பின்னணியில் சைக்கிளோ சைக்கிள் எனும் ஆதிவாசிப் பாடல் ஒலிக்க நடனமாடுவது தான் சைக்கிளோ சைக்கிள் சேலஞ்ச்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.