- சாதிக்க வேண்டும் என்ற சபதம் இருக்கிறது!
- வாழ்ந்து காட்டவேண்டுமென்ற வைராக்கியம் இருக்கிறது!
- வென்றூ காட்ட வேண்டுமென்ற வீம்பு இருக்கிறது!
- அடைவதற்கு என்று ஒரு லட்சியம் இருக்கிறது!
- அந்த லட்சியத்தில் ஒரு தீவிரம் இருக்கிறது!
- வாய்ப்பு எங்கே, எங்கே என்று தேடுகின்ற தாகம் இருக்கிறது!
- வாய்ப்பு வரவில்லை என்றாஇ அதை உருவாக்கும் திறமை இருக்கிறது!
- உணவு, உறக்கம் இவற்றைக்கூட ஒதுக்கி வைக்கும் உழைப்பு இருக்கிறது!
- தடை, தாமதம், தோல்வி எது வந்தாலும் சமாளிக்க தாராள மனம் இருக்கிறது!
- அடிமேல் அடிபட்டாலும் அடுத்த அடியை எடுத்து வைக்கும் துணிச்சல் இருக்கிறது!
- தங்கள் தகுதிக்கும், திறமைக்கும் சரியான தீனி எங்கே எங்கே என்கிற தேடல் இருக்கிறது!
- சூழ்நிலைக்குத் தகுந்தபடி அனுசரித்துப் போகும் அடக்கம் இருக்கிறது!
- விமர்சனத்தைச் சரியான விதத்தில் எடுத்துக் கொள்ளும் விவேகம் இருக்கிறது!
- அறிவு, ஆற்றல், ஆதரவுகள் அனைத்தையும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளும் மூளை இருக்கிறது!
- குறிக்கோள் நோக்கிய வேலைகளுக்கு மட்டுமே நேரத்தை அதிகமாய் ஒதுக்கும் அக்கறை இருக்கிறது!
- கடமைகள் காத்துக் கிடக்க பொழுது போக்குகளில் புத்தியை செலுத்தாத பொறுப்பு இருக்கிறது!
- நேற்றை விட இன்று எவ்வளவு வளர்ந்தோம் என அளந்து அறியும் ஆர்வம் இருக்கிறது!
அத்தனைக்கும் அடிப்படையாய் அசைக்க முடியாத தன்னம்பிக்கை இருக்கிறது!