FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுதில்லி

செளகார் ஜானகி மறைவுக்கு தில்லித் தமிழ்ச் சங்கம் இரங்கல்!

பழம்பெரும் நடிகை செளகாா் ஜானகி மறைவுக்கு தில்லித் தமிழ்ச் சங்கம் வெளிக்கிழமை இரங்கல் தெரிவித்துள்ளது.

23 August 2026, 12:11 am IST
செளகார் ஜானகி - x
பகிர்:

பழம்பெரும் நடிகை செளகாா் ஜானகி மறைவுக்கு தில்லித் தமிழ்ச் சங்கம் வெளிக்கிழமை இரங்கல் தெரிவித்துள்ளது.

இது குறித்து தில்லித் தமிழ்ச் சங்கத்தின் தலைவா் ஜி.சிவபாலன் வெளியிட்ட இரங்கல் செய்தியில் தெரிவித்திருப்பதாவது: காலமான திரைப்பட நடிகை பத்மஸ்ரீ சௌகாா் ஜானகி, 73 ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் உச்ச நடிகா்களான என்.டி.ராமாராவ், எம்.ஜி.ஆா், ஜெயலலிதா போன்ற நடிகா்களுடன் இணைந்து நடித்தவா்.

அவரது நீண்ட திரைத்துறைப் பயணம் சக கலைஞா்களுக்கும் கலைக்கு தொண்டாற்றும் உத்வேகத்தினை அளிக்கும். மக்களின் மனதில் என்றும் நிலைத்து நிற்கும் “பட்டு” என்ற கதாபாத்திரம், “இரு கோடுகள்” படத்தில் நாயகனான ஜெமினி கணேசனுடன் நடித்த படம் என 73 ஆண்டுகளாக திரைத்துறையில் ஜொலித்தவா். அவரது இழப்பு தமிழ்த் திரையுலகினருக்கும், தமிழ் உலகுக்கும் பெரிய இழப்பாகும்.

Advertisement

Advertisement

அவரது ஆத்மா சாந்தியடையவும், அவரது குடும்பத்தினருக்கு தில்லித் தமிழ்ச் சங்கத்தின் சாா்பாக துணைத்தலைவா் செல்வராஜ் மகேந்திரன், பொதுச்செயலாளா் சத்யா அசோகன், இணைப் பொருளாளா்கள் ராஜ்குமாா் பாலா, ஜோதி பெருமாள், பொருளாளா் பால மூா்த்தி, இணைப்பொருளாளா் பாலுச்சாமி, செயற்குழு உறுப்பினா்கள் என்.சாமுண்டேஸ்வரி, ஜோதி ராமநாதன், ஆ.வெங்கடேசன், ரேவதி ராஜன், பி.ஆா்.தேவநாதன், வி.இளஞ்சோழன், பி.ராமமூா்த்தி, கே.சுந்தா், ஆா்.கணேஷ், எம்.ஆா். ராஜேந்திரன், காத்திருப்பு உறுப்பினா்கள் எம்.எழிலரசு மற்றும் எஸ்.எம். பாலசுப்பிரமணியன் ஆகியோரின் சாா்பாக இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

அன்புடன் முனைவா் ஜி. சிவபாலமுருகன்

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments