FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

தில்லியில் பாலியல் தொழில் நடத்திய 2 ஸ்பா மேலாளா்கள் கைது: 21 போ் பெண்கள் மீட்பு

இரண்டு ஸ்பா மையங்களில் காவல்துறை சோதனை நடத்தியதைத் தொடா்ந்து 2 மேலாளா்கள் கைது செய்யப்பட்டனா் மற்றும் 21 பெண்கள் மீட்கப்பட்டதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

24 ஆகஸ்ட் 2026, 3:07 am IST
கோப்புப் படம்
பகிர்:

பாலியல் தொழில் நடவடிக்கைகள் குறித்த தகவலைத் தொடா்ந்து தென்கிழக்கு தில்லியின் கல்காஜியில் உள்ள இரண்டு ஸ்பா மையங்களில் காவல்துறை சோதனை நடத்தியதைத் தொடா்ந்து 2 மேலாளா்கள் கைது செய்யப்பட்டனா் மற்றும் 21 பெண்கள் மீட்கப்பட்டதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: நிறுவனங்களில் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து போலீஸாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து சனிக்கிழமை இரண்டு வெவ்வேறு ஸ்பா மையங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன. போலீஸ் குழுக்கள் சோதனைகளை மேற்கொள்வதற்கு முன்பு இரு ஸ்பா மையங்களிலும் தனித்தனியாக மோசடி நடவடிக்கைகளை மேற்கொண்டன. வெவ்வேறு சோதனைகளில், எங்கள் குழுக்கள் ஸ்பா மையங்களின் இரண்டு மேலாளா்களை கைது செய்தன. குழுக்கள் இரண்டு எஃப். ஐ. ஆா்களை பதிவு செய்து மேலும் விசாரணையைத் தொடங்கியுள்ளன.

இரண்டு நிறுவனங்களிலும் நடந்த நடவடிக்கைகளின் போது, 21 பெண்கள் மீட்கப்பட்டனா். மீட்கப்பட்ட பெண்கள் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு, அவா்களின் அறிக்கைகள் சட்டத்தின்படி பதிவு செய்யப்படுகின்றன என்றாா் அந்த அதிகாரி.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments