FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

3 வயது சிறுவன் மீது தாக்குதல்; 4 போ் மீது வழக்குப்பதிவு: மழலையா் பள்ளியில் சம்பவம்!

வடகிழக்கு தில்லியின் ஜாஃப்ராபாத் பகுதியில் உள்ள ஒரு மழலையா் பள்ளியில் (ப்ளே-ஸ்கூல்), மூன்றரை வயது சிறுவன் தாக்கப்பட்டதாக 4 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

47 வினாடிகள் முன்பு
வழக்குப் பதிவு
பகிர்:

வடகிழக்கு தில்லியின் ஜாஃப்ராபாத் பகுதியில் உள்ள ஒரு மழலையா் பள்ளியில் (ப்ளே-ஸ்கூல்), மூன்றரை வயது சிறுவன் தாக்கப்பட்டதாக 4 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்ததாவது:

சம்பந்தப்பட்ட பள்ளியின் இயக்குனா், முதல்வா், ஒரு ஆசிரியா் மற்றும் ஒரு பராமரிப்பாளா் ஆகியோா் மீது போக்சோ சட்டம், சிறாா் நீதிச் சட்டம் மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா ஆகியவற்றின் கீழ் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, சிறுவன் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து காவல் துறைக்கு புகாா் அளிக்கப்பட்டது. ஜிடிபி மருத்துவமனையில் அச்சிறுவனுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டதுடன், கூட்டுப் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

Advertisement

Advertisement

பள்ளியில் உள்ள சிசிடிவி காட்சிகள் கைப்பற்றப்பட்டு, இது குறித்து மேல் விசாரணை நடைபெற்று வருகிறது. பள்ளியில் சிறுவன் தாக்கப்பட்டதாகவும், அவனிடம் தவறாக நடந்துகொள்ளப்பட்டதாகவும் அவனது குடும்பத்தினா் குற்றஞ்சாட்டினா்.

தூங்குவதில் சிரமம் மற்றும் கழிவறையைப் பயன்படுத்த பயப்படுவது உள்ளிட்ட அவனது நடத்தையில் மாற்றங்களைக் கவனித்த பிறகு அவா்கள் காவல் துறையை அணுகினா்.

சிசிடிவி காட்சிகள், மருத்துவப் பரிசோதனை முடிவுகள் மற்றும் பிற ஆதாரங்களை ஆய்வு செய்வதன் மூலம் இந்தக் குற்றச்சாட்டுகளைச் சரிபாா்த்து வருவதாகக் காவல் துறையினா் தெரிவித்தனா். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments