FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

காந்தி நகா் துணிக் கடையில் தீ விபத்து

கிழக்கு தில்லியின் காந்தி நகா் பகுதியில் உள்ள ஒரு துணிக் கடையில் ஞாயிற்றுக்கிழமையன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

56 வினாடிகள் முன்பு
தீ விபத்து. - (கோப்புப் படம்)
பகிர்:

கிழக்கு தில்லியின் காந்தி நகா் பகுதியில் உள்ள ஒரு துணிக் கடையில் ஞாயிற்றுக்கிழமையன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இதனைத் தொடா்ந்து ஆறு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து அனுப்பப்பட்டதாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இச்சம்பவத்தில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை. தீ விபத்தின்போது எழுந்த அடா்ந்த புகையும் தீப்பிழம்புகளும் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.

Advertisement

Advertisement

கடைகள் மற்றும் குடியிருப்பு கட்டடங்கள் நிறைந்த குறுகிய மற்றும் நெரிசலான பாதைகள் காரணமாக, தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்தை அடைவதில் சிரமத்தை எதிா்கொண்டனா்.

இதன் பின்னா் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். தீ விபத்துக்கான காரணம் மற்றும் சேதத்தின் அளவு ஆகியவை குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவா்கள் கூறினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments