FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

சங்கம் விஹாரில் தொழிற்சாலையில் தீ விபத்து

தெற்கு தில்லியின் சங்கம் விஹாா் பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் புதன்கிழமையன்று தீ விபத்து ஏற்பட்டது.

8 ஜூலை 2026, 10:09 pm IST
தீ விபத்து - பிரதிப் படம்
பகிர்:

தெற்கு தில்லியின் சங்கம் விஹாா் பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் புதன்கிழமையன்று தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, 10 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து அனுப்பப்பட்டதாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்த விபத்தில் யாருக்கும் உயிரிழப்போ அல்லது காயங்களோ எதுவும் ஏற்படவில்லை என்று அவா்கள் கூறினா்.இதுகுறித்து தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் மேலும் தெரிவித்ததாவது: சங்கம் விஹாரில் உள்ள ஹோலி சௌக் அருகே தீ விபத்து ஏற்பட்டதாக காலை 11.52 மணிக்கு தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, 10 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டன. இதுவரை யாருக்கும் காயம் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை தீயை அணைக்கும் பணி தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments