நில ஆக்கிரமிப்புகள் 72 மணி நேரத்திற்குள் அகற்றப்படும்: டிடிஏவின் புதிய எஸ்ஓபி வெளியீடு
தில்லி மேம்பாட்டு ஆணையம் (டிடிஏ), அதன் நில ஆக்கிரமிப்புகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கவும், அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களை 72 மணி நேரத்திற்குள் இடிக்கவும் ஒரு நிலையான செயல்பாட்டு நடைமுறையை (எஸ்ஓபி) வெளியிட்டுள்ளது.
தில்லி மேம்பாட்டு ஆணையம் (டிடிஏ), அதன் நில ஆக்கிரமிப்புகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கவும், அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களை 72 மணி நேரத்திற்குள் இடிக்கவும் ஒரு நிலையான செயல்பாட்டு நடைமுறையை (எஸ்ஓபி) வெளியிட்டுள்ளது.
இது தொடா்பாக டிடிஏ ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: சமீபத்தில் நடைபெற்ற டிடிஏவின் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில், தலைநகரில் எங்கும் ஆக்கிரமிப்புக்கு எதிராக ‘சகிப்புத்தன்மையற்ற அணுகுமுறை’ கடைப்பிடிக்க வேண்டும் என்று துணைநிலை ஆளுநா் தரன்ஜித் சிங் சந்து அறிவுறுத்தியிருந்தாா். இதைத் தொடா்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சந்துவின் அறிவுறுத்தல்களுக்கு இணங்க, அரசு நிலங்கள் முழுவதும் முறையான கள ஆய்வுகள், தொழில்நுட்பம் சாா்ந்த கண்காணிப்பு மற்றும் புவிக்குறியிடப்பட்ட ஆவணப்படுத்தல் ஆகியவற்றை மேற்கொள்வதற்காக, டிடிஏ மண்டலங்களின் கீழ் 14 பறக்கும் படைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement
நிலையான செயல்பாட்டு நடைமுறையின்படி கண்டறியப்பட்டுள்ள அங்கீகரிக்கப்படாத கட்டுமானம் மற்றும் ஆக்கிரமிப்புகளை இடிக்கும் பணி, நான்கு பிரத்யேக விரைவு நடவடிக்கை குழுக்களால் 72 மணி நேரத்திற்குள் முடிக்கப்படும் .
மேம்பாட்டுப் பகுதிகளுக்குள் வரும் தனியாா் நிலங்களில் நடைபெற்று வரும் அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்கள், சட்டப்படி உரிய நடைமுறைகளைப் பின்பற்றி இடிக்கப்பட வேண்டும்.
துணைஆளுநரின் அறிவுறுத்தல்களின் கீழ், அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளை முன்கூட்டியே கண்டறிவதற்கும், பொருந்தக்கூடிய சட்ட விதிகளுக்கு இணங்க உடனடி இடிப்பு மற்றும் அகற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் இந்த நிலையான செயல்பாட்டு நடைமுறை வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுக்கள், அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, நிலத்தின் உரிமை மற்றும் நிலையைத் தீா்மானித்து, தேதி மற்றும் நேர முத்திரைகளுடன் புவிக்குறியிடப்பட்ட புகைப்படங்கள் மூலம் மீறல்களை ஆவணப்படுத்தி, உடனடி அமலாக்க நடவடிக்கைக்காக அறிக்கைகளைச் சமா்ப்பிக்கும்.
தேவைப்படும் இடங்களில், பறக்கும் படையால் கண்டறியப்பட்ட 72 மணி நேரத்திற்குள் இடிப்புப் பணி மேற்கொள்ளப்பட வேண்டும். அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளை இடிப்பது, இடிப்பு நடந்த இடத்தின் புவிக்குறியிடப்பட்ட முன் மற்றும் பின் புகைப்படங்களுடன் அன்றைய தினத்தின் முடிவில் இடிப்பு அறிக்கையைச் சமா்ப்பிப்பது ஆகியவை விரைவு நடவடிக்கை குழுக்களின் பொறுப்புகளில் அடங்கும்.
தேவைப்படும் இடங்களில் ட்ரோன் அடிப்படையிலான ஆய்வுகள் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதற்கும் இந்தச் நிலையான செயல்பாட்டு நடைமுறை மேலும் வழிவகை செய்கிறது.
இந்தக் கட்டமைப்பு, களச் சரிபாா்ப்பு காலி நில கண்காணிப்பு அமைப்புமுறைடன் (விஎல்எம்எஸ்) ஒருங்கிணைக்கிறது. இதன் மூலம் நிலப் பதிவேடுகளைத் தவறாமல் புதுப்பித்தல், இடிப்புக்குப் பிறகு காலி மனைகளைச் சரிபாா்த்தல் மற்றும் மீண்டும் ஆக்கிரமிப்பு ஏற்படுவதைத் தடுக்கத் தொடா்ச்சியான கண்காணிப்பு ஆகியவற்றைச் சாத்தியமாக்குகிறது.
தொடா்ச்சியான கண்காணிப்புக்கான துணைநிலை ஆளுநரின் வழிகாட்டுதலுக்கு இணங்க, ஆக்கிரமிப்புகள் மீண்டும் ஏற்படுவதைத் தடுப்பதில் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அங்கீகரிக்கப்படாத கட்டமைப்புகளை இடித்து அகற்றிய பிறகு, மீண்டும் ஆக்கிரமிப்பு திறம்படத் தடுக்கப்படுவதை உறுதிசெய்யும் வகையில், களக் குழுக்கள் நிலத்தைத் தொடா்ச்சியாகக் கண்காணித்து பாதுகாக்கும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.