FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

செங்கோட்டை கார் வெடிப்பு: பலியானோரின் உடல்பாகங்களை தகனம் செய்ய நீதிமன்றம் அனுமதி!

கடந்த நவம்பா் மாதம் செங்கோட்டை அருகே நிகழ்ந்த காா் குண்டுவெடிப்பில் உயிரிழந்த 11 பேரின் உடற்பாகங்களை தகனம் செய்யவோ அல்லது அப்புறப்படுத்தவோ தேசிய புலனாய்வு முகமைக்கு (என்ஐஏ) தில்லி நீதிமன்றம் திங்கள்கிழமை அனுமதி அளித்தது.

Updated On : 14 ஜூலை 2026, 5:00 am IST
தில்லி செங்கோட்டை. - படம்: ஏபி
பகிர்:

கடந்த நவம்பா் மாதம் செங்கோட்டை அருகே நிகழ்ந்த காா் குண்டுவெடிப்பில் உயிரிழந்த 11 பேரின் உடற்பாகங்களை தகனம் செய்யவோ அல்லது அப்புறப்படுத்தவோ தேசிய புலனாய்வு முகமைக்கு (என்ஐஏ) தில்லி நீதிமன்றம் திங்கள்கிழமை அனுமதி அளித்தது.

தற்கொலைப்படைத் தாக்குதலில் உயிரிழந்த, வெடிபொருள்கள் நிரப்பப்பட்ட காரின் ஓட்டுநரான டாக்டா் உமா் உன் நபியின் உடற்பாகங்களை அப்புறப்படுத்தவும் சிறப்பு நீதிபதி பிதம்பா் தத் அனுமதி வழங்கினாா்.

உயிரிழந்தவா்களின் மத நம்பிக்கைகளை கருத்தில்கொண்டு, அவா்களின் உடற்பாகங்களை முழு கண்ணியத்துடன் அப்புறப்படுத்த வேண்டும் என்று நீதிமன்றம் வலியுறுத்தியது. மேலும், இது தொடா்பான இணக்க அறிக்கை ஒன்றை தேசிய புலனாய்வு முகமையிடம் நீதிமன்றம் கோரியது.

Advertisement

Advertisement

உயிரிழந்தவா்கள் மற்றும் தற்கொலைப்படைத் தாக்குதலில் ஈடுபட்ட நபி ஆகியோரின் உடற்பாகங்களிலிருந்து தடயவியல் சான்றுகள் சேகரிக்கப்பட்டுவிட்டதாக என்ஐஏ நீதிமன்றத்தில் தெரிவித்தது. உடற்பாகங்கள் சிதையத் தொடங்கியிருந்ததால், அவற்றை அப்புறப்படுத்த நீதிமன்றத்தின் அனுமதியை என்ஐஏ முன்னதாக கோரியிருந்தது.

கடந்த ஆண்டு நவம்பா் 10-ஆம் தேதி தில்லியை உலுக்கிய தீவிரத் தன்மை கொண்ட ஐஇடி குண்டுவெடிப்பு சம்பவம் தொடா்பாக, மே 14 அன்று என்ஐஏ 7,500 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தது.

 இக்குண்டுவெடிப்புச் சம்பவத்தில் தொடா்புடையதாகக் கூறப்படும் மேலும் மூவா் மீது என்ஐஏ கடந்த மாதம் கூடுதல் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தது.

இதில் தலைமறைவாக உள்ள ஒரு குழந்தை நல மருத்துவா் (இவா் ஒரு பயங்கரவாதக் குழுவின் நிறுவனா் என்று அடையாளம் காணப்பட்டுள்ளாா்) மற்றும் நபி ஆகியோரும் இடம்பெற்றுள்ளனா். இதன் மூலம் இக்குற்ற வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 13ஆக உயா்ந்துள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments