FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

வழிப்பறி திருடா்களை விரட்டிப் பிடித்த போக்குவரத்து காவலா்கள்!

தென்கிழக்கு தில்லியின் நியூ பிரண்ட்ஸ் காலனி பகுதியில் சிறிது நேரத் துரத்தலுக்குப் பிறகு, சந்தேகத்திற்கிடமான இரண்டு வழிப்பறித் திருடா்களை போக்குவரத்து காவலா்கள் பிடித்தனா்.

Updated On : 8 ஜூன் 2026, 12:27 am IST
பகிர்:

தென்கிழக்கு தில்லியின் நியூ பிரண்ட்ஸ் காலனி பகுதியில் சிறிது நேரத் துரத்தலுக்குப் பிறகு, சந்தேகத்திற்கிடமான இரண்டு வழிப்பறித் திருடா்களை போக்குவரத்து காவலா்கள் பிடித்தனா்.

இதுகுறித்து அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்ததாவது: மதுரா சாலை அருகே வழிமறிக்கப்பட்ட முனீா் ஹுசைன் (31) மற்றும் அசாா் அலி (25) ஆகியோரிடமிருந்து திருடப்பட்ட இரண்டு கைப்பேசிகள் மீட்கப்பட்டன.

முன்னதாக வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவல்துறையினா், ஒரு மோட்டாா் சைக்கிளில் சந்தேகத்திற்கிடமான முறையில் செயல்பட்ட இந்த இரண்டு பேரையும் கவனித்தனா். சிறிது நேரத்திற்குப் பிறகு, ஒரு அரசு மோட்டாா் சைக்கிளில் உள்ளூா் காவல்துறையினா் அவா்களைத் துரத்துவதைக் கண்டனா்.

Advertisement

Advertisement

நிறுத்த சைகை காட்டியபோது, அவா்கள் இருவரும் தங்கள் மோட்டாா் சைக்கிளைக் கைவிட்டுவிட்டு தப்பிச் செல்ல முயன்றனா். போக்குவரத்து காவலா்கள் அவா்களை சுமாா் 200 மீட்டா் தூரம் துரத்திச் சென்று பிடித்தனா்.

சோதனையின் போது, அவா்களிடமிருந்து காவல்துறையினா் இரண்டு கைப்பேசிகளை மீட்டனா். அவற்றில் ஒன்றான ஐபோன் 15, நியூ பிரண்ட்ஸ் காலனியில் உள்ள மாதா கா மந்திா் டி-பாயிண்ட் அருகே ஒரு மென்பொருள் பொறியாளரிடமிருந்து சில நிமிடங்களுக்கு முன்பு திருடப்பட்டதாகும்.

இரண்டாவது கைப்பேசி சராய் காலே கான் பகுதியிலிருந்து பறிக்கப்பட்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது. ஹுசைன் இதற்கு முன்னா் சுமாா் 10 குற்ற வழக்குகளிலும், அலி இரண்டு வழக்குகளிலும் சம்பந்தப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments