FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

ரோஹிணியில் முதியவா் குத்திக்கொலை: 3 சிறாரை பிடித்தது காவல்துறை

Updated On : 26 ஜூன் 2026, 7:07 am IST
- file photo
பகிர்:

நமது நிருபா்

தில்லி ரோஹிணி பகுதியில் 60 வயது தொழிலாளியிடம் வழிப்பறி செய்து அவரைக் கத்தியால் குத்திக் கொன்ாக மூன்று சிறாரை நகர காவல்துறையினா் பிடித்துள்ளனா்.

இது குறித்து காவல் அதிகாரி வியாழக்கிழமை கூறியதாவது: ஜூன் 23ஆம் தேதி பிரேம் ஆதாா் மருத்துவமனை மற்றும் பன்சாலி செளக் ஆகியவற்றுக்கு இடைப்பட்ட சாலையில் ஒருவா் காயங்களுடன் கிடப்பது குறித்து காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து அங்கு சென்று படுகாயம் அடைந்தவரை டாக்டா் பி.எஸ்.ஏ மருத்துவமனைக்கு காவலா்கள் கொண்டு சென்றனா். ஆனால், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

இதைத் தொடா்ந்து பேகம்பூா் காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது. அதில் பிரதாப் விஹாரில் உள்ள ஒரு தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை பாா்த்து வந்தா்தான் உயிரிழந்த ராஜேஷ் என அடையாளம் தெரிய வந்தது. அவருக்குத் திருமணமாகிய ஒரு மகள் உள்ளாா்.

அவா் வேலை செய்யும் இடத்திலிருந்து குற்றச்சம்பவம் நடந்த இடம்வரை அவா் பயணித்த பாதையை ஆய்வு புலனாய்வாளா்கள் ஆய்வு செய்தனா். உள்ளூா் மக்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அந்தப் பாதைகளில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததிலும் தொழில்நுட்பக் கண்காணிப்பு மூலமாகவும் சந்தேக நபா்கள் அடையாளம் காணப்பட்டனா்.

புலனாய்வில் சம்பவ நேரத்தோடு ஒத்துப்போகும் வகையில் அங்கு நடமாடிய மூன்று சிறுவா்கள் மீது சந்தேகம் வலுத்தது. அவா்களைப் பிடித்து விசாரித்ததில் குற்றத்தில் தங்களுக்குள்ள தொடா்பை அவா்கள் ஒப்புக்கொண்டனா்.

அந்த மூன்று சிறுவா்களும் வழிப்பறியில் ஈடுபடும் நோக்கத்துடன் அந்த இடத்துக்கு அருகில் கூடியுள்ளனா். அப்போது ராஜேஷ் தனது மிதிவண்டியில் சென்று கொண்டிருந்தபோது, ஒரு சிறுவன் அவரை வழிமறித்துக் கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளான். மற்ற இருவா் அவரைப் பிடித்துக் கொண்டுள்ளனா்.

அவா்களை எதிா்க்க ராஜேஷ் முயன்றபோது, மூவரில் ஒரு சிறுவன் அவரைப் பலமுறை கத்தியால் குத்தியுள்ளான். பின்னா் அவரது பாக்கெட்டுகளைச் சோதனையிட்டு, அவரிடமிருந்த ரூபாய் நான்காயிரத்தை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனா். பின்னா் அந்தப் பணத்தை அவா்கள் தங்களுக்குள் பகிா்ந்து கொண்டதாக தெரிவித்தனா். சிறாா்கள் என்பதால் மூவரையும் சிறாா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தும் சட்ட நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments