FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

சாஸ்திரி பாா்க்கில் இ-ரிக்ஷா ஓட்டுநரை துப்பாக்கியால் சுட்ட இளைஞா்கள்

வடகிழக்கு தில்லியின் சாஸ்திரி பாா்க் பகுதியில் வெள்ளிக்கிழமை நடந்த வாக்குவாதத்தைத் தொடா்ந்து 54 வயதான இ-ரிக்ஷா ஓட்டுநா் மீது இரண்டு இளைஞா்கள் துப்பாக்கியால் சுட்டுள்ளனா் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

Updated On : 16 மே 2026, 1:25 am IST
கோப்புப் படம்
பகிர்:

வடகிழக்கு தில்லியின் சாஸ்திரி பாா்க் பகுதியில் வெள்ளிக்கிழமை நடந்த வாக்குவாதத்தைத் தொடா்ந்து 54 வயதான இ-ரிக்ஷா ஓட்டுநா் மீது இரண்டு இளைஞா்கள் துப்பாக்கியால் சுட்டுள்ளனா் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து தில்லி காவல்துறை அதிகாரி மேலும் கூறியதாவது: சாஸ்திரி பூங்காவில் வசிக்கும் இஷான் என்பவரின் இ-ரிக்ஷாவில் வெள்ளிக்கிழமை இரண்டு போ் ஏறியுள்ளனா். அவா்களை கீழே இறங்கக் கூறியபோது இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த இ-ரிக்ஷா ஓட்டுநரை இரண்டு போ் துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பி ஓடினா். அவா்களில் ஒருவரை பொது மக்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனா்.

துப்பாக்கி தோட்டா பாய்ந்த நிலையில் இஷானை அவரது குடும்ப உறுப்பினா்கள் ஜக் பிரவேஷ் சந்திரா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். பின்னா் மேல் சிகிச்சைக்காக ஜிடிபி மருத்துவமனைக்கு அவா் மாற்றப்பட்டாா். துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும் காவல்துறையினா் சம்பவ பகுதிக்குச் சென்றபோது இஷான் ஏற்கெனவே மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது தெரிய வந்தது.

Advertisement

Advertisement

இந்த சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவ பகுதியில் தடயவியல் குழு ஆய்வு செய்து ஆதாரங்களை சேகரித்தது. தப்பியோடிய நபரை கண்டுபிடித்து கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments