FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

கேரளத்தில் இரண்டு படகுகள் கவிழ்ந்ததில் 4 மீனவர்கள் மாயம்

கேரளத்தில் 2 மீன்பிடிப் படகுகள் கவிழ்ந்தது பற்றி....

Updated On : 1 ஆகஸ்ட் 2026, 4:06 pm IST
கேரளம். - கோப்புப்படம்.
பகிர்:

கேரளக் கடற்கரைப் பகுதியில் இரண்டு படகுகள் கவிழ்ந்ததில் 4 மீனவர்கள் மாயமான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம், திருவனந்தபுரம் கடற்கரைப் பகுதியில் கடல் கொந்தளிப்பு காரணமாக இரண்டு மீன்பிடிப் படகுகள் தனித்தனி விபத்துகளில் கவிழ்ந்தன.

இந்த சம்பவத்தில் 4 மீனவர்கள் மாயமாமதாக சனிக்கிழமை காவல் துறையினர் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

மாயமான மீனவர்களைக் கண்டறிய இந்தியக் கடற்படையின் உதவி கோரப்பட்டுள்ளதாக முதல்வர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவங்கள் குறித்த வழக்குப் பதிவு செய்துள்ள அஞ்சுதெங்கு கடலோரக் காவல்துறையினர், இந்தியக் கடலோரக் காவல் படையுடன் இணைந்து தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால் மோசமான வானிலை காரணமாகப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதனிடையே விழிஞ்சம் மற்றும் சங்கமுகம் ஆகிய இடங்களிலிருந்து புறப்பட்ட பல படகுகளைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்றும், அப்படகுகளைக் கண்டறியும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் மேலும் கூறினர்.

summary

Four fishermen went missing after two fishing boats capsized in separate incidents off the Thiruvananthapuram coast amid rough sea conditions, police said on Saturday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments