FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

270 பயணிகளுடன் கடலுக்குள் மூழ்கிய கப்பல்: 159 பேர் பத்திரமாக மீட்பு

வடக்கு சைப்ரஸில் 270 பயணிகளுடன் சென்ற கப்பல், கடலுக்கு நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது குறித்து...

- பிரதிப் படம்
பகிர்:

வடக்கு சைப்ரஸில் 270 பயணிகளுடன் சென்ற கப்பல், கடலுக்கு நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

கைரேனியா கடற்கரையில் துருக்கியின் தாசுசு துறைமுகத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமையில் பயணிகள் கப்பல் புறப்பட்ட நிலையில், கடற்கரையிலிருந்து 4 கடல் மைல் தொலைவு சென்றபோது நீர் கசியத் தொடங்கி, கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

கப்பல் கவிழ்ந்த விபத்து குறித்து தகவலறிந்த மீட்புப் படையினர், உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர். மீட்புப் பணியில் கடலோரக் காவற்படையும் ஹெலிகாப்டரும் ஈடுபடுத்தப்பட்டது.

Advertisement

Advertisement

மேலும், கப்பலில் பயணிகள், பணியாளர்கள் என 270 பேர் இருந்ததாகவும், அவர்களில் 6 பயணிகள் பலியானதாகவும், இதுவரையில் 159 பேர் மீட்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், கைரேனியா துறைமுகத்தில் ஆம்புலன்ஸ் சேவையும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

summary

At least six dead after boat carrying nearly 270 passengers, crew capsizes off northern Cyprus

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments